சென்னை துறைமுகத்துக்கு வந்த க‌ல்‌வி சு‌ற்றுலா க‌ப்ப‌ல்!

Webdunia
புதன், 12 மார்ச் 2008 (10:26 IST)
கல்விச் சுற்றுலாவாக வெளிநாட்டு மாணவ-மாணவிகளுடன் கடலில் மிதக்கும் பல்கலைக்கழக கப்பல ் சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளது.

வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் உலக சுற்றுலா மற்றும் கலாசாரம் ஒரு பாடமாக அமைந்துள்ளது. இது 6 மாத கால படிப்பாகும். இதற்காக அந்தப் பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் 831 பேர் எம்.வி.எக்ஸ்புளோரர் என்ற கல்விச் சுற்றுலா கப்பல் மூலம் சென்னைக்கு வந்துள்ளனர். இவர்களில் 263 பேர் மாணவர்கள். 568 பேர் மாணவிகள். இவர்கள் தவிர கப்பல் சிப்பந்திகள் 195 பேர் உள்ளனர்.

இந்தக் கப்பல் பஹாமாஸ் நாட்டில் இருந்து கடந்த ஜனவரி 23ஆ‌ம ் தேதி புறப்பட்டது. பல நாடுகளைக் கடந்து, இறுதியாக மொரிஷியஸ் நாட்டுக்கு இந்தக் கப்பல் சென்றது. அங்கிருந்து சென்னைக்கு எக்ஸ்புளோரர் நேற்று காலை வந்தது. 15ஆ‌ம ் தேதி மலேசியாவுக்கு எக்ஸ்புளோரர் புறப்பட்டுச் செல்கிறது. இந்த கப்பல் பயணக் கல்வி மே 9ஆ‌ம ் தேதியோடு முடிகிறது. இந்தக் கப்பலில் 9 வகுப்பறைகள் உள்ளன. நீச்சல் குளம், 940 ஓய்வறை உட்பட பல வசதிகளை இந்த கப்பல் கொண்டுள்ளது.

மாணவ-மாணவிகள் இந்தியாவின் கலாசாரம் மற்றும் பண்பாடு போன்றவற்றை தெரிந்து கொள்ளும் வகையில் 10 குழுக்களாகப் பிரிந்து பல்வேறு பகுதிகளுக்குச் செல்கின்றனர். தமிழகத்தில் காஞ ்‌ சிபுரம், மாமல்லபுரம் உட்பட சரித்திர புகழ் பெற்ற இடங்களுக்கு பலர் செல்கின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரெப்போ வட்டி விகிதத்தில் என்ன மாற்றம்? ரிசர்வ் வங்கி கவர்னரின் முக்கிய அறிவிப்பு..!

பங்குச்சந்தை மட்டுமல்ல, தங்கம் வெள்ளி விலையும் உச்சம்.. ஒரே நாளில் 2,720 ரூபாய் உயர்ந்த தங்கம்..!

போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி: உச்சத்திற்கு சென்ற பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 2700 புள்ளிகள் உயர்வு..!

கங்கை நதியில் பீர் அருந்தும் இளைஞர்களின் வீடியோ.. உபி பாஜக அரசுக்கு கடும் கண்டனங்கள்..

போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி.. தலைகீழாக குறைந்த கச்சா எண்ணெய் விலை..!

Show comments