Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்.ஆர்.ஐ. வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை!

Webdunia
திங்கள், 3 மார்ச் 2008 (18:54 IST)
பூர்வீக இந்தியர்கள ், அயல்நாடு வாழ் இந்தியர்கள் ஆகியவர்களது குழந்தைகளின் கல்விக்கு இந்திய அரசு உதவித்தொகை அறிவித்துள்ளது.

வரும் 2008-09 ஆம் ஆண்டிற்குரிய கல்வியாண்டில் இந்தியாவில் பட்டப்படிப்ப ு, தனித்துவமிக்க படிப்ப ு, பொது படிப்புகள் ஆகிய படிப்புகளை மேற்கொள்பவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. மத்திய அரசு திட்டத்தின்படி கல்வி கட்டணம ், விடுதி கட்டணம் உட்பட கல்வ ி நிறுவனங்களுக்கு செலுத்தப்படும் அனைத்து கட்டணங்களிலும் 75 விழுக்காடு கட்டணச ் சலுகை அளிக்கப்படுகிறது.

இவற்றிற்கு ஆகும் செலவு அல்லது 3,600 அமெரிக்க டாலர் இவற்றில் எது குறைவோ அதை இந்திய அரசு வழங்கும ்.

இந்த சலுகையைப்பெற கோலாலம்பூரில் உள்ள இந்திய உயர் ஆணையத்தில் வரும் மே 18-ம் தேதி நடக்க உள்ள நுழைவுத் தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறவேண்டும்.

மருத்துவம ், மருத்துவம் சார்ந்த கல்விகளுக்கு இந்த உதவித்தொகை சலுகை பொரு‌ந்தாது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தை தொடும் பூண்டு விலை! - மக்கள் அதிர்ச்சி!

போலீசாரிடம் பிடிபடாமல் இருக்கும் நடிகை கஸ்தூரி.. முன் ஜாமீனுக்கு முயற்சியா?

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்படுவாரா ஹசீனா? இன்டர்போல் உதவியை நாடும் வங்கதேசம்

இரண்டாவது மனைவியை 8 துண்டுகளாக வெட்டி வீசிய கணவன்! - திருவண்ணாமலையை உலுக்கிய சம்பவம்!

இனி காத்திருக்க தேவையில்லை.. சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு சூப்பர் வசதி..!

Show comments