Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகழ்பெற்ற ஆசிரியர்கள்

Webdunia
செவ்வாய், 4 செப்டம்பர் 2007 (17:03 IST)
ஆசிரியர் பணியாற்றிய எத்தனையோ பேர் உலகப் புகழ் பெற்றுள்ளனர். அவர்கள் எண்ணற்றவர்கள். அதில் ஒரு சிலரைப் பற்றி...

ஆல்பர்ட ஐன்ஸ்டின்

பொதுச் சார்புத்துவக் கோட்பாடு மற்றும் சிறப்பு சார்புத்துவக் கோட்பாடுகளைக் கண்டுபிடித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டின் ஆசிரியராகப் பணியாற்றியவரே. ஒரு விஞ்ஞானியாகவும், சார்புத்துவக் கோட்பாடுகளை கண்டறிந்தவராகவும் மட்டுமே நமக்குத் தெரிந்த ஐன்ஸ்டின் ஆசிரியராகவும் ஜொலித்துள்ளார்.

1909 ஆம் ஆண்டு சூரிச்சில் பேராசிரியராக தனது வாழ்க்கையைத் துவக்கிய ஐன்ஸ்டின், பல்வேறு நாட்டு பல்கலைக்கழகங்களில் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றினார்.

பேராசிரியராக பணியாற்றிக் கொண்டே சார்புக் கோட்பாடுகள் பற்றி ஆய்வு நடத்தி வந்தார்.

அதன் விளைவாக 1905ல் சார்புக் கோட்பாடு, 1916ல் பொது சார்புக் கோட்பாடு, 1926ல் இயக்கம் பற்றிய பிரவ்னின் கோட்பாடு மீதான ஆய்வு, 1938ல் பெளதீகவியலின் பரிணாமம் என பல்வேறு கோட்பாடுகளை கண்டறிந்து நூல்கள் வெளியிட்டார்.

விஞ்ஞானத்தைத் தவிர வேறு சில துறைகளிலும் சில நூல்களை ஐன்ஸ்டின் எழுதியுள்ளார். அதில், 1933ம் ஆண்டு வெளியிடப்பட்ட போர் ஏன்? என்ற நூல் மக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

1921 ஆம் ஆண்டு சார்புக் கோட்பாட்டு கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசைப் பெற்றார் ஐன்ஸ்டின். ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் இவருக்கு அறிவியல், மருத்துவம், தத்துவத் துறைகளில் டாக்டர் பட்டமளித்து கெளரவித்தன.

கலிலியோ

இத்தாலியின் பைசா நகரத்தில் 1564ஆம் அண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி பிறந்த கலிலியோ, படிக்கும் வயதில் கிறித்துவ பாதிரியாராக மாற வேண்டும் என்ற ஆசையை அடக்கி, தந்தைக்காக மருத்துவம் பயின்று, அப்போது கணிதத்தின் மீது கொண்ட பற்றினால் மருத்துவத்தை பாதியிலேயே நிறுத்தி கணித ஆராய்ச்சி நடத்தி, அதற்கிடையே தொலைநோக்கியைக் கண்டறிந்து உலகிற்கு காட்டியவர். இவர் தனது சாதனை வாழ்க்கையை பேராசிரியராகவே துவக்கியுள்ளார்.

1589 ஆம் ஆண்டு பைசா நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது கலிலியோவிற்கு. அதே சமயம் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தார் கலிலியோ. 1609ஆம் ஆண்டு தூரத்தில் உள்ளப் பொருட்களைக் காண உதவும் தொலைக் கண்ணாடி அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த தொலைக் கண்ணாடியை தனது கணிதத் திறனையும், தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தியும் தொலைநோக்கியைக் கண்டறித்தார். தொலைநோக்கி மூலமாக சந்திரனைக் கண்ட முதல் மனிதன் என்ற பெருமையை கலிலியோ பெற்றார்.

மேலும், தொலைநோக்கியின் திறனை அதிகரித்து சூரியனைச் சுற்றி வரும் ஜூபிடர், சனி, வீனஸ் கோள்களையும் கண்டறிந்தார். சூரியனை மையமாகக் கொண்டே அனைத்துக் கோள்களும் சுற்றி வருகின்றன என்பதை வெளியிட்டவர் கலிலியோ.

ஐசக் நியூட்டன்

1642 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி பிறந்தவர் சர் ஐசக் நியூடன். பள்ளிப் பருவத்திலேயே எதைப் பற்றியாவது சிந்தித்துக் கொண்டும், எதையாவது ஆராய்ச்சி செய்து கொண்டும் இருந்த ஐசக் நியூடன், கணிதவியலில் பட்டம் பெற்றார். அப்போது அவர் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பகுதி நேர விரிவுரையாளராகப் பணியாற்றினார். ஒரு சில பல்கலைக்கழகங்களில் பேச்சாளராகவும் சென்றுள்ளார்.

1665 முதல் 1666 வரை இவர் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்தார். அப்போதுதான் புவியீர்ப்பு விசை, மற்றும் ஈர்ப்பு விசைப் பற்றிய கோட்பாடுகளை வெளியிட்டார்.

வண்ணங்களைப் பற்றியும், வானவில்லைப் பற்றியும் பல்வேறு கண்டுபிடிப்புகளை வெளியிட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments