தமிழகத்தில் மேலும் ஒரு அண்ணா பல்கலை

Webdunia
வியாழன், 19 ஜூலை 2007 (15:17 IST)
பொறியியல் கல்லூரிகளுக்காக தமிழகத்தில் மேலும் ஒரு அண்ணா பல்கலைக்கழகத்தை திருநெல்வேலியில் துவக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் 237 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. தற்போதைய நிலையில் பொறியியல் படித்தவர்களுக்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நல்ல வேலைவாய்ப்புகள் இருந்து வருகிறது.

இதனால் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் சென்னையில் மட்டும் இருந்த அண்ணா பல்கலைக்கழகத்தை பிரித்து ஏற்கனவே திருச்சியிலும், கோவையிலும் 2 புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

தற்போது தென்மாவட்டங்களுக்கும் பொறியியல் கல்வியை விரிவுபடுத்த திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகம் என்ற பெயரில் மேலும் ஒரு தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தை உருவாக்க தமிழக அரசு தீர்மானித்து அதற்கான உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

மிகவிரைவில் இந்த பல்கலைக்கழகத்திற்கான நிர்வாக பணிகள் தொடங்கப்பட்டு துணைவேந்தர் நியமிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எள்ளுவய பூக்கலயே!.. தனித்துவிடப்பட்ட ஓபிஎஸ்!.. எல்லாம் வீணாப்போச்சி!...

எல்லா பக்கமும் கதவ மூடியாச்சி!.. என்ன முடிவெடுக்கப் போகிறார் ராமதாஸ்?...

வாடகைக்கு ஆட்களை அமர்த்தி 100 நாய்களை சுட்டுக்கொன்ற கிராம தலைவர்.. போலீஸ் வழக்குப்பதிவு..!

அரை கிலோமீட்டர் டாக்சியில் செல்ல ரூ.18000.. சிறையில் கம்பி எண்ணும் டாக்சி டிரைவர்..!

குரங்கு என நக்கலடித்த கணவர்!.. தூக்கில் தொங்கிய மாடல் அழகி!...

Show comments