பாரத ரத்னா விருது யாருக்கு வழங்கப்படுகிறது?

Webdunia
கல ை, இலக்கியம ், அறிவியல் மேம்பாட்டுக்காக மிக உயரிய சேவை செய்தவர்களுக்கும ், பொதுவான மக்கள் மேம்பாட்டுக்காக சீரிய பணி செய்தவர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. ஒரு மாமனிதர் இறந்த பிறகும் கூட அவருடைய சேவையைப் பாராட்டி இவ்விருது வழங்கும் நடைமுறை நம் நாட்டில் உள்ளது.

? ஒரு மாநிலத்தின் சட்டம ், ஒழுங்கு சீர்குலைந்து விடுகிறது. அப்போது அந்த மாநிலத்தின் ஆளுநர் அவசரச் சட்டம் பிறப்பித்து அந்த ஆட்சியைக் கலைத்து விடலாம ா?

முடியாது. அந்த மாநில ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அதைப் பற்றிய அறிக்கை தான் அனுப்ப முடியும். அதை ஆராய்ந்து மாநில அரசின் ஆட்சியைக் கலைப்பது பற்றிய முடிவை குடியரசுத் தலைவர் தான் எடுப்பார். இதற்கு விதி விலக்கு உண்டு. ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநருக்கு மட்டும் அவசரச் சட்டம் கொண்டு வர அதிகாரம் உள்ளது. குடியரசுத் தலைவருக்கு அவசரச் சட்டம் பிறப்பிக்கும் அதிகாரத்தை வழங்கும் விதிகள் 352, 356, 360.

? ஓர் உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி அந்த நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு நீதிபதியை மீண்டும் வரவழைத்து நீதிபதியாகப் பணியாற்றச் செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறத ா?

இருக்கிறது. ஆனால் இதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். (விதிகள் 216, 217)

? ஒரு தனி மனிதனின் அடிப்படை உரிமைக்கும் அரசாங்கத்தின் வரி விதிக்கும் அதிகாரத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறத ா?

இருக்கிறது. ஏனென்றால் அரசு நினைத்தால் வரி விதிக்கலாம். அதற்கான சட்டம் இயற்ற வேண்டியது அவசியம். (விதி எண் 265) ஓர் ஆணையைப் போட்டு விட்டு வரி வசூல் செய்யலாம் என்று களத்தில் இறங்க முடியாது. சட்டம் செய்ய வேண்டும். அந்தச் சட்டம் தனிமனிதனின் அடிப்படை உரிமையைப் பறிக்கிறது என்று யாரும் கூக்குரல் எழுப்ப முடியாது என்று விதி எண் 13 கூறுகிறது. இதில் அரசின் கை தான் ஓங்கி நிற்கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் எந்த ஆட்சி!.. மோடி.. பழனிச்சாமி.. டிடிவி.. ஒவ்வொருத்தரும் ஒன்னு சொல்றாங்களே!..

மோடி சொல்வது டபுள் என்ஜின் இல்லை!.. டப்பா என்ஜின்!.. மு.க.ஸ்டாலின் ராக்ஸ்!..

ஜிம்முக்கு வரும் பெண்களை வீடியோ எடுத்து மதம் மாற பிளாக்மெயில்.. 50 இந்து பெண்கள் சிக்கினார்களா?

திமுகவுக்கு எண்ட் கார்ட் போட்டாச்சி!.. கவுண்ட்டவுன் ஸ்டார்ட்!.. தெறிக்கவிட்ட மோடி!...

கள்ளக்காதலனுடன் சேர்த்து கணவரை கொலை செய்த மனைவி.. இரவு முழுவதும் ஆபாச படம் பார்த்த அதிர்ச்சி செயல்..!

Show comments