Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறிவியல் அறிவோம்....மின்சாரம்

Webdunia
மின் உற்பத்தி வளர்ச்சி ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் தொடர்புடையது. இந்தியா முழுவதும் ஆண்டு ஒன்றுக்கு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் ரூ.35 000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது. நம் நாட்டில் 35-40 சதவீதம் மின் சக்தி வீணடிக்கப்படுகிறது. இது சர்வதேச அளவில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 12.14 சதவீதத்தை விட மிகவும் அதிகமாகும்.

ஒரு இல்லத்தில் மாதம் ஒன்றுக்கு 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்றால் அதற்காக சுமார் 300 கிலோ நிலக்கரி மாதம் ஒன்றுக்கு (நாள் ஒன்றுக்கு 10 கிலோ) எரிக்கப்பட வேண்டும். மற்ற மாசு ஏற்படுத்தும் பொருள்களுடன் நிலக்கரி எரிக்கப்படுவதால் 300 கிலோ அளவிற்கு கரியமில வாயுவும் உருவாகிறது.

நிலக்கரி எரிப்பின் மூலம் நம் நாட்டில் ஆண்டு ஒன்றுக்கு 10 கோடி டன் சாம்பல் உருவாகிறது. நிலக்கரியை பயன்படுத்தும் மின் உற்பத்தி நிலையங்கள் 200 இருப்பதாக எடுத்துக் கொள்வோம். முறையாக சாம்பலை அப்புறப்படுத்தவில்லை என்றால் இவற்றின் மூலம் உருவாகும் சாம்பல் ஏழு கால் பந்தாட்ட மைதானங்களில் ஐந்து மீட்டர் உயரத்துக்கு மலை போல் குவியும். நிலக்கரியை எரிப்பதன் மூலம் இடர்பாடுகள் அதிகம் இருந்த போதிலும் நம் நாட்டில் உற்பத்தியாகும் மொத்த மின்சாரத்தில் 60 சதவீதம் நிலக்கரி மூலமே பெறப்படுகிறது.

வாய்ப்புகள் இருந்தும் வட இந்தியாவில் தண்ணீர் மூலம் 64 சதவீதம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படாமல் உள்ளது. அதே போன்று மேற்கு இந்தியா (31 ) தென் இந்தியா (40 ) கிழக்கு இந்தியா (68 ) மற்றும் வடகிழக்கு இந்தியா (93 ) ஆகிய பகுதிகளிலும் வாய்ப்புகள் இருந்தும் நீர் மின் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளன. ஆக இந்தியா முழுவதுமாக சராசரியாக 71 சதவீத அளவிற்கு நீர் மின் உற்பத்தி பணிகள் செயல்படுத்தப்படாமல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

புனல் மின் நிலையம் என்றால் என் ன? (Hydro-electric power station s)

உயரமான இடத்தில் அணையைக் கட்டி அங்கிருந்து பெரிய பெரிய குழாய்கள் மூலம் கீழ் நோக்கி தண்ணீரை பாய்ந்து வரும்படி செய்து அந்நீரைக் கொண்டு மின் உற்பத்தி மின்னாக்கிகளை சுழலும்படி செய்வது தான் புனல் மின் நிலையமாகும். தண்ணீர் வீழ்ச்சி வேகத்தினால் கிடைக்கும் ஆற்றலைக் கொண்டு மின்னாக்கிகள் (ஜெனரேட்டர்கள்) சுழலும் போது மின்சாரம் உற்பத்தியாகிறது.

தமிழகத்தில் மேற்குப் பகுதியில் கந்தா என்னுமிடத்தில் மலைகளில் இருந்து கீழ் நோக்கி இறங்கும் சிறு நதிகள் மீது பல அணைகளைக் கட்டி அவற்றில் புனல் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பைகார ா, பாபனாசம் முதலிய இடங்களிலும் இவ்வித புனல் மின் நிலையங்கள் உள்ளன. மேட்டூர் அணையிலிருந்து வேகமாக மறுபுறம் பாயும் நீரைக் கொண்டும் புனல் மின்நிலையம் இயக்கப்படுகிறது. இவற்றில் எல்லாம் அணைகளில் நீர் வற்றினால் அல்லது நீர் இருப்பு குறைந்தால் அந்த அளவுக்கு மின் உற்பத்தியும் குறையும்.

தொடர்ந்து நீர்வரத்து இருக்கிற இடங்களில் தான் புனல் மின் நிலையம் சாத்தியம். அப்படியின்றி நீங்கள் உயரமான இடத்தில் பெரிய அணை கட்டி அதில் தண்ணீரை நிரப்பலாம். அந்த தண்ணீரைக் கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். பிறகு அதே நீரை மேலே ஏற்றி அணையை நிரப்பி மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.

காடம்பாறையில் புதுமையான புனல் மின் நிலையம்

தமிழ்நாட்டில் காடம்பாறை என்னுமிடத்தில் இவ்விதம் புதுமையான புனல் மின்நிலையம் செயல்படுகிறது. அதாவது அந்த அணைக்கு இயற்கையில் நீர்வரத்து எதுவும் கிடையாது. ஒவ்வொரு தடவையும் அணையில் தண்ணீரை நிரப்பி மின்சாரத்தை உற்பத்தி செய்தாக வேண்டும்.

இரவு 11 மணி முதல் 5 மணி வரை மின் உபயோகம் குறைவாக இருக்கும். ஆகவே காடம்பாறையில் அந்த நேரத்தில் மின்சாரத்தைப் பயன்படுத்தி கீழே உள்ள நீரைக் குழாய்கள் மூலம் மேலே ஏற்றுகிறார்கள். இவ்விதம் அணை நிரப்பப்படுகிறது. பின்னர் உச்ச கட்டத் தேவை உள்ள நேரத்தில் அணையில் உள்ள நீர் கீழ் நோக்கி பாயும்படி செய்யப்பட்டு சுமார் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின் நிலையத்தில் நிகர லாபம் இருப்பதாகச் சொல்ல முடியாது. ஏனெனில் தண்ணீரை மேலே ஏற்ற மின்சாரம் செலவாகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

Show comments