Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிக்கு வழி

Webdunia
வெற்றிக்கு வழி என்பது மலர் தூவிய பாதை அன்று அது முட்களாலும ், புதர்களாலும் நிரம்பியது. எந்த வெற்றியாளனும் பிறக்கும் போதே வெற்றியைக் கையில் பிடித்துக் கொண்டு பிறப்பது இல்லை. பின்னர் எது அவனை பிற்கால வாழ்க்கையில் வெற்றியாளனாக மாற்றுகிறது என்று கேட்டால ், தன்னம்பிக்கையும் இடைவிடாத முயற்சியுமேயாகும்.

தன்னுள் இருக்கும் திறமைகளை அடையாளம் காணுதல் இதற்கு அவசியம். இந்தத் தேடலும் புரிதலும் ஒரு நாளில் வந்துவிடுவதில்லை. தன்னுடைய முன்னவர்கள ை, அவர்களுடைய எண்ணங்கள ை, அவர்கள் கடந்து வந்த பாதைகளைப் பற்றிய புரிதல்தான் அவனுள்ளே நம்பிக்கை விதையை விதைக்கிறது. அந்த நம்பிக்கை காலம் செல்லச் செல்ல சிறிய செடியாகி மரமாகி நிலைக்கிறது. அதன் பயனாக வாழ்க்கையின் கனியை அவன் சுவைத்துப் பார்க்க முடிகிறது.

இந்த அடிப்படையில் பல்வேறு சான்றோர்களின் எண்ணப் பதிவுகளை இங்கே தெரிவு செய்து அளித்துள்ளோம். இவற்றை இளைஞர்கள் நெஞ்சில் பதித்துக் கொண்ட ு, அதைச் சார்ந்த செயல் திறனில் தளராமல் ஈடுபட்டால் வெற்றி உறுதி.

இதோ உங்களுக்கு வழிகாட்டும் எண்ணப் பதிவுகள ்

- பெரிய கனவுகளைக் காணுங்கள ், மனிதர்களின் ஆன்மாவை அசைத்துப் பார்க்கிற ஆற்றல் பெரிய கனவுகளுக்கு மட்டுமே உண்டு - மார்கஸ ் அரேலியஸ ்

தங்கள் கனவுகளின் அழகை நம்புகிறவர்களுக்கே எதிர்காலம் சொந்தம் - எலியனார் ரூஸ்வெல்ட ்

ஒரு பைசா கூட இல்லாதவன்தான் மிகவும் ஏழ்மையான மனிதன் என்று கருதிவிடாதீர்கள். வாழ்க்கையில் ஒரு கனவு கூட இல்லாமல் இருப்பவன்தான் உண்மையிலேயே ஏழை. - பென்சில்வேனியா பழமொழ ி

வாழ்க்கையை வெறுமனே வாழாதீர்கள். உங்களுக்கென்று ஒரு வாழ்க்கையை வடிவமைத்து வாழுங்கள்.
- ஜப்ஃரான ்

ஒருவன் தேடவேண்டிய ஒரே அதிர்ஷ்டம் வாழ்க்கைக்கான குறிக்கோள்தான். அதை வெளியில் தேடினால் கிடைக்காது. தனது மனதுக்குள் தேடித்தான் அதனைக் கண்டுபிடிக்க வேண்டும் - ராபர்ட் லுயிஸ ் ஸ்டீவன்சன ்

தோல்வி என்பது உங்களுக்குள்ளிருந்து மட்டுமே வர முடியும். வெளியிலிருந்து தோல்வி வருவது சாத்தியமேயில்லை. பலவீனமான இலக்குதான் உங்கள் முன்னேற்றத்துக்குப் பெரும் தடையாக இருக்க முடியும் -எமர்சன ்

தகவல்கள் தெளிவாக இருந்தால் முடிவுகள் தானாகவே வந்து குதிக்கும் - பீட்டர் டிரக்கர ்

எனது அறிவை வளர்த்த 6 கனிவான பணியாளர்கள்.

என்ன
ஏன்
எப்போது
எப்படி
எங்கே
யார ்
ஆகிய கேள்விகள்.

- ருட்யார்ட் கிப்ளிங ்

முதலில் நாம் நமது பழக்கங்களை உருவாக்குகிறோம். பின்னர் நமது பழக்கங்கள் நம்மை உருவாக்குகின்றன -ஜன் டிரைடன ்

ஒரு மனிதனை இன்னொரு மனிதனிடமிருந்து பிரிப்பதற்காக மதங்கள் ஏற்படவில்லை. மனிதர்களை சேர்த்து வைப்பதுதான் மதங்களின் நோக்கம் -காந்தியடிகள ்

உலகுக்கு உரியராய் உயர்த்து மாந்தரை
இணையற்ற தொண்டு செய்
ஏறுபோல் பீடு கொள ்

- பாவேந்தர் பாரதிதாசன ்

கட்டுப்பாடான முயற்சியினாலும ், கடுமையான உழைப்பினாலும் மனிதன் உண்மையை எய்த முடியும் -டாக்டர் எஸ ். ராதாகிருஷ்ணன ்

வரலாற்றை கற்றுணர்வது நல்லது. அது போன்ற வரலாற்றை படைப்பது அதனினும் மேலானது -பண்டிதர் நேரு
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments