Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடையில் ஏற்படும் உடல் சூட்டை தடுக்கும் அற்புத வழிகள்...!

Webdunia
வெயில் காலம் வந்துவிட்டால் உடல்சூடு, இதன் காரணமாக ஏற்படும் மயக்கம், பித்தம், தலைவலி, கண்வீக்கம், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், பித்த வாந்தி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள் வருவது சகஜம்.
கோடையில் மோர் உடலைக் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும். மேலும் மோரில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் புரோபயாடிக்குகள் போன்றவை அதிகம் உள்ளதால், இது கோடையில் உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.
 
கோடைக்காலத்தில் தினமும் காலையில் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடித்து வர வேண்டும். இதனால் உடலில் உள்ள அதிகப்படியான  வெப்பம் குறைவதைக்  காணலாம்.
 
அதிகாலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் வெந்தயத்தை ஒரு ஸ்பூன் எடுத்துக் கொண்டு வாயில் போட்டு, தண்ணீர் குடித்து விழுங்க வேண்டும். இப்படி தினமும் கோடையில் செய்து வந்தால், உடல் வெப்பத்தைக் குறைக்கலாம்.
உடல் வெப்பத்தைக் குறைப்பதற்கான வழி என்னவென்று கேட்டால், முதலில் பலருக்கும் தண்ணீர் தான் நினைவில் வரும். ஆகவே ஒரு  அகன்ற பாத்திரத்தில்  குளிர்ந்த நீரை நிரப்பி, அதில் கால்களை ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வர, உடலில் உள்ள  அதிகமான வெப்பம் வெளியேறும். மேலும் குடிக்கும் நீரின் அளவையும் அதிகரிக்க வேண்டும்.
 
தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவுங்கள். மற்றும் வாரம் ஒருமுறையாவது எண்ணெய் தேய்த்து குளிப்பது உங்களது உடல் சூட்டை தணிக்க உதவும். வெள்ளரிப் பச்சடியில், வாழைத்தண்டை நறுக்கிச் சேர்த்துச் சாப்பிட, உடல் சூடு நீங்கி கண் எரிச்சல் நீங்கும், சிறுநீர்க்  கோளாறுகளும் சரியாகும்.
 
வெயில் காலங்களில் உண்டாகும் சிறுநீர் எரிச்சல், மஞ்சளாக சிறுநீர் கழிவது, சொட்டுச் சொட்டாக வெளியேறுவது, வெளியேறும் வழியில் கல் அடைப்பு போன்ற பல பிரச்னைகளுக்கு காய்கறி மற்றும் பழங்களைவிட பெரிய தீர்வு வேறு எதுவும் இல்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களுக்கு முகத்தில் ஏன் முடி வளர்கிறது? மருத்துவ காரணங்கள்..!

எச்.எம்.பி.வி. தொற்று பரவுவது எப்படி? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

ஆபத்து நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments