Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஞ்சியை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளக்கூடாது ஏன்...?

Webdunia
இஞ்சிக்கு அஞ்சாதது எதுவுமே இல்லை, என்பது சித்த மருத்துவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. எந்த மாதிரியான நோயாக இருந்தாலும் அதற்கான  மருந்தில் பெரும்பாலும் இஞ்சி இடம்பிடித்துவிடும். அது இஞ்சியாக இருக்கும்போது மருத்துவத்துக்குப் பயன்படுவதைவிட, காய்ந்து 'சுக்கு' என்றான பிறகுதான்   பயன்பாடு அதிகம்.
வயிற்றில் அல்சர் பிரச்சனை, சிறுகுடல் பாதிப்பு உள்ளவர்கள் இஞ்சி டீயை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அது பெரிய பாதிப்பை   ஏற்படுத்திவிடும்.
 
மருத்துவ மகத்துவம் கொண்ட இஞ்சியை தினமும் உணவில், சட்னி, பொங்கல் சேர்த்து பயன் பெறலாம். அப்படி செய்வதன் மூலம் உணவே மருந்தாகிவிடும். சக்தி நிறைந்த இஞ்சியின் தோல் பகுதி மட்டும் நஞ்சு போன்றது. தோலை நீக்கிவிட்டுத்தான் இஞ்சியை பயன்படுத்த வேண்டும்.
 
இஞ்சியை அதிகமாக குடிப்பதால், அது அமிலத் தன்மையை அதிகரிக்கச் செய்து, நெஞ்செரிச்சல், வயிற்று வலி பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
 
இஞ்சிக்கு உஷ்ணப்படுத்தும் குணம் உண்டு என்றாலும் கபம், வாதம், சிலேத்துமம் போக்குகிறது. இஞ்சிக்கு, ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் அதிகமுண்டு.  குடலில் சேரும் கிருமிகளை அழித்துவிடும். கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. மலச்சிக்கல், வயிற்றுவலி ஏற்பட்டால் இஞ்சிச்சாறில் சிறிது உப்பு கலந்து பருக   வேண்டும்.
 
பலவீனமான கர்ப்பிணிகள் மற்றும் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இஞ்சி டீயை அதிகமாக எடுத்துக் கொண்டால், அது உதிரப்போக்கை அதிகப்படுத்திவிடும்.
 
நோய்களால் பாதிக்கப்பட்டு, அதற்கு மருந்துகளை சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இஞ்சி டீயை குடிக்கக் கூடாது. ஏனெனில் அது மருந்துக்களுடன் வினைபுரிந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
 
இஞ்சியை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளக்கூடாது. தினமும் 5 மி.லி. அளவு சாறை, தேனுடன் கலந்து பருகவேண்டும். அல்லது தோல் நீக்கிய இஞ்சியை சிறு  துண்டுகளாக்கி தேனுடன் கலந்து தேன் ஊறலாக சாப்பிட வேண்டும். காலையில் இதை  சாப்பிட்டால் நாள் முழுக்க ஜீரணம் நன்றாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments