Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் என்ன செய்யவேண்டும்...?

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (15:28 IST)
உடல் எடையை குறைக்க வேண்டும் என்றாலே நாம் மிகவும் விரும்பி உண்ணும் உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர், ஆனால் அதற்கு மாற்றாக சில உணவுகள் உள்ளன.


இப்போது சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உணவுகளுக்கு மாறாக, மாற்று உணவாக இந்த உணவுகளை சாப்பிடுங்கள், நிச்சயமாக உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றம் ஏற்படும். அதிகமாக காபி குடிப்பது உடலுக்கு தீங்கானது. ஆனால், கிரீன் டீ உடலுக்கும் நல்லது, உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.

ருசிக்காக ஐஸ் கிரீம் சாப்பிடுவதை தவிர்த்து உடல் ஆரோக்கியம் மற்றும் உடல் எடையை குறைக்க உதவும் பழங்களை சாப்பிடலாம். பழங்களை தனியாகவும் சாப்பிடலாம் அல்லது பழரசமாக (ஜூஸ்) செய்து சாப்பிடலாம்.

இனிப்பு யாராலும் தடுக்க முடியாத உணவு. ஆனால் இது உடல் எடையை என வந்த பிறகு நீங்கள் சர்க்கரையை தவிர்த்து தான் ஆக வேண்டும். இதற்கு மாற்று உணவாக நீங்கள் தேனை சாப்பிடலாம்.

உருளைக்கிழங்கு வாயுப் பிரச்சனை மற்றும் உடல் எடையை அதிகரிக்கும் பண்புடையது. ஆனால், சர்க்கரைவள்ளி கிழங்கு உடல் எடை குறைக்கவும் உதவும், கல்லீரலுக்கும் சக்தி கொடுக்கும் தன்மையுடையது.

கிரீம் உணவுகள் சாப்பிடும் பழக்கம் பெரும்பாலும் அனைவரிடமும் இருக்கிறது. உடல் எடை அதிகரிக்க இதுவும் ஓர் காரணமாக விளங்குகிறது. எனவே, இதற்கு மாற்றாக நீங்கள் தயிரை சாப்பிடலாம். ஆனால், வீட்டில் தயாரித்த சுத்தமான தயிர். சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான தயிர்களில் ஃப்ளேவர்கள் மற்றும் செயற்கை இனிப்பூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இதுவும், உங்கள் உடல் எடையை அதிகரிக்க செய்யும்.

ஆலிவ் எண்ணெய் இதயத்திற்கும் நல்லது. உடல் எடையை குறைக்கவும் உதவும். எனவே, உடல் எடை பிரச்சனை உள்ளவர்கள் சாதாரண எண்ணெய் அல்லது காய்கறி எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்த்து இனி ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம்.

மைதா பிரெட்டில் சத்து என ஏதும் இல்லை, மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிடவே கூடாது. ஆனால், கோதுமை பிரெட்டில் நிறைய நார்ச்சத்து இருக்கிறது. இது உடல் எடை குறைக்கவும் உதவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments