Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரண்டை உப்பின் மருத்துவ குணங்கள் என்ன...?

Webdunia
பிரண்டை சதைப்பற்றான நாற்கோண வடிவ தண்டுகளுடைய ஏறு கொடி. பற்றுகம்பிகளும், மடலான இலைகளும் கொண்டிருக்கும்.

சாறு உடலில் நமைச்சல் ஏற்படுத்தும்,சிவப்பு நிற உருண்டையான சதைக்கனிகளை உடையது.வேர்,தண்டு ஆகியவை மருத்துவகுணம் உடையவை, இதன் இன்னொரு பெயர் வச்சிரவல்லி.
 
இதன் தண்டுகளில் நார் நீக்கி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் செரியாமை நீக்கும். பிரண்டை சாற்றில் புளி, உப்பு, கலந்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் பற்றுப்போட சதை பிழற்சி, அடிபட்ட வீக்கம், எலும்பு முறிவு, வீக்கம் தீரும்.
 
கடைகளில் கிடைக்கும் பிரண்டை உப்பு 2 அரிசி எடைஅளவு 3 வேளை பாலில் கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி, சீதபேதி, நுரைத்த பச்சை பேதி தீரும்.
 
பிரண்டை உப்பினை 2 அல்லது 3 அரிசி எடையளவு வெண்ணெய்யில் கலந்து சாப்பிட்டு வர வாய்ப்புண், வாய்நாற்றம், உதடு, நாக்கு வெடிப்பு தீரும்.
 
பிரண்டை உப்பினை 1 குண்டுமனி வீதம் வெண்ணெய்யுடன் சாப்பிட்டு வர சிறுகுடல், பெருங்குடல்,இரைப்பை புண்கள்,  தீராத நாட்பட்ட வயிற்றுவலி, மூலம்,மூல அரிப்பு, மலத்துடன் சீழ், இரத்தம் வருதல் தீரும்.
 
ஜாதிக்காய் சூரணத்துடன் பிரண்டை உப்பினை சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி, பலவீனம், தாது இழப்பு ஆகியவை தீரும்.
 
பிரண்டை வேரை உலர்த்தி பொடித்து 1 கிராம் அளவு காலை, மாலை கொடுத்துவர முறிந்த எலும்புகள் ஒன்று கூடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவில் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

வல்லாரை கீரை சாப்பிடிவதால் கிடைக்கும் பலன்கள்..!

ஈயின் மூளையில் என்ன இருக்கிறது? அதை கொல்வது ஏன் கடினமாக உள்ளது?

வாழைக்காய் உணவில் சேர்ப்பதால் உடலுக்கு நல்லதா? கெட்டதா?

வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments