Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுநீரக கற்கள் ஏற்படுவதை தடுக்க தவிர்க்கவேண்டிய உணவுமுறைகள் என்ன...?

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (13:35 IST)
சிறுநீரக கற்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பின், அதிக அளவு தண்ணீர் உட்கொள்ளுதல் அவசியம்.


சிறுநீரககற்களின் தன்மையை பொருத்து மருத்துவரின் ஆலோசனையின் படி, மருந்தோ அல்லது பிற முறைகளையோ கையாண்டு, கற்கள் திரும்பத் திரும்ப ஏற்படுவதை தடுக்கலாம்.

எந்த உணவைச் சாப்பிட்டாலும் நன்கு தண்ணீர் குடிக்க வேண்டும். ஈரப்பதம் அதிகமுள்ள உணவு வகைகள், நார்ச்சத்து அதிகமுள்ள உணவு வகைகளைச் சாப்பிடுவது சிறுநீரகக் கல் உருவாகாமல் தடுக்க உதவும்.

குறைந்த அளவு மசாலா, மிளகாய் சேர்க்கப்பட்ட உணவை உட்கொள்வதன் மூலம் உடல் அதிக வெப்பமாவதைத் தடுக்கலாம். நல்லெண்ணெயும் ஆலிவ் எண்ணெயும் உடலுக்குக் குளிர்ச்சி தரும்.

சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும். உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, டீ, சமையல் சோடா, சீஸ், சாஸ் ஆகியவைகளை தவிர்க்க வேண்டும்.

கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாழைக்காய் உணவில் சேர்ப்பதால் உடலுக்கு நல்லதா? கெட்டதா?

வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!

புதினாவை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

மனதை உருக்கும் ஒரு சந்திப்பு சென்னையில் : இரத்த ஸ்டெம் செல் கொடையாளர் அதனால் பலனடைந்த 11 வயது சிறுவனுடன் சந்திப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments