Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பச்சை பட்டாணி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன...?

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (17:09 IST)
ஒரு கப் பட்டாணியில் 8 கிராம் வரையிலும் புரதம் நிறைந்திருக்கிறது. புரதம், நமது உடலுக்கு மிக அடிப்படையான ஒன்று. வயது மற்றும் பாலினத்தைப் பொருத்து, ஒரு நாளைக்கு நமது உடலுக்கு 19 கிராம் முதல் 56 கிராம் வரை புரதம் தேவைப்படுகிறது.


கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பீட்டா குளுக்கோன், பட்டாணியில் அதிக அளவு உள்ளதால், அது இதய நோயிலிருந்து நம்மைக் காக்கிறது.

பச்சை பட்டாணியில் வைட்டமின் கே சத்து அதிகம் நிறைந்துள்ளது இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள் மாற்றும் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைகிறது.

பச்சை பட்டாணியில் பீட்டா குலுக்கன் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இதை சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் படிவதை தடுக்கிறது. உடல் எடை அதிகமாகாமல் தடுக்கிறது.

பச்சை பட்டாணியில் உடலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான வைட்டமின்கள், புரதங்கள், நார்ச்சத்து போன்றவை நிறைந்திருக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பச்சை பட்டாணி சாப்பிடுவதால் சுலபமாக உடலுக்கு ஊட்டச்சத்து கிடைத்து விடுகிறது.

இதயத்திலிருந்து உடலின் பல்வேறு பாகங்களுக்கு ரத்தம் சென்று வருகிறது. இப்படி ரத்தம் தடையின்றி சீராக செல்ல ரத்தத்தில் ஆன்டி-ஆக்சிடண்டுகள் அதிகம் தேவை. பச்சை பட்டாணி சாப்பிடுபவர்களுக்கு இவை அதிகம் கிடைப்பதால் இதயம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

திராட்சை பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments