Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதனை குடிப்பதால் என்ன பலன்கள்...?

Webdunia
தொட்டால் சிணுங்கியை ஒருவர் தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள் மின்சாரம் போல் பாயும். 48 நாள் தவறாது தொட்டு வந்தால் உளவாற்றல் பெருகுமாம். இந்த மூலிகை காந்த சக்தி உடையது.

தொட்டால் சிணுங்கி வேரையும் இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து வைக்கவும். இந்த சூரணம் -15 கிராம் பசும்பாலில் குடிக்க சிறு நீர்  பற்றிய நோய்கள், மூலச்சூடு, ஆசனக்கடுப்பு தீரும். 
 
சூடு பிடித்தால் சிறுநீர்த் தாரை எரியும். இதற்கு 10 கிராம் இலையை அரைத்து 5 நாள் காலை தயிரில் சாப்பிட குணமாகும்.
 
ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பாலில் 15 கிராம் கலந்து சாப்பிடவேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டு வர ஆண்மை  பெருகும்.
 
தொட்டா சிணுங்கி இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும், உடல் குளிர்ச்சியாகும், வயிற்றுப்புண்ணும் ஆறும், சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
 
தொட்டா சிணுங்கி இலை, வேர் இரண்டையும் காய வைத்து பொடி செய்து பாலில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க சர்க்கரை நோய்  குறையும்.
 
குழிப்புண் குணமாக இவ்விலையைப் பறித்து வந்து சுத்தம் செய்து, உள்ளங்கையில் வைத்துக் கசக்கி, அதில் இருந்து வரும் சாற்றை உடலில் ஏற்பட்டுள்ள குழிப்பண்ணீல் விடுவதோடு கொஞ்சம் இலையையும் அந்தப்புண்ணின் மீது கசக்கி வைத்து தூய்மையான துணியால் கட்டி வந்தால் சில நாட்களிலேயே குழிப்புண்  குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபத்து நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

தேவையற்ற முடிகளை இயற்கை பொருட்களைக் கொண்டு நீக்குவது எப்படி?

தமிழ்நாட்டில் பரவும் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) தொற்று! அறிகுறிகள் என்ன?

சர்க்கரை நோயாளிகள் பனங்கிழங்கு சாப்பிடலாமா?

லிப்ஸ்டிக் போடுவதால் என்னென்ன பிரச்சனைகள் வரலாம்?

அடுத்த கட்டுரையில்
Show comments