Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பால் கலக்காத டீ குடிப்பதால் என்ன நன்மைகள்...?

Webdunia
டீ சாப்பிடுவது உடல் நலத்துக்கு நல்லதல்ல என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் ஒரு கோப்பை காபியில் இருக்கும் காபினைவிட மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே ஒரு கோப்பை டீயில் காபின் உள்ளது.

சரியான அளவில் காபின் எடுத்துக் கொண்டால் அது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. மன அழுத்தத்தை குறைக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
 
உண்மையில் கொதிக்கும் தண்ணீரில் கருப்பு டீ போடும் போது அது அல்சருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் பொருளாக மாறுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
 
ஆரோக்கியமானவர்கள் உடலில் இரும்பு சத்து சேருவதை டீ தடுப்பதில்லை, ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்பவர்களுக்கு டீ எந்த கெடுதலையும் ஏற்படுத்தாது. பால் கலக்காத டீயில் ஒரு ஸ்லைஸ் லெமன் துண்டை நறுக்கிபோட்டு குடியுங்க பித்தம், பேதி, வயிற்று வலி மறைந்திடும்.
 
டீ பிரியர்களாக இருந்து இரும்பு சத்து குறைவாக இருப்பவர்களாக இருந்தால் சாப்பாட்டுக்கு இடையே டீயை குடியுங்கள், சாப்பாட்டுக்குப் பின்பு டீயை குடிக்க வேண்டாம்.
 
மூன்று கப் தண்ணீர் குடிக்கும்போது அது உடலில் எந்த அளவுக்கு தண்ணீரின் அளவை பூர்த்தி செய்கிறதோ அதே அளவுதான் மூன்று கப் தேநீர் குடித்தாலும் பூர்த்தியாகிறது.
 
தேநீர் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அளவை அதிகரிக்கிறது. எனவே உடல் நோய்க் கிருமிகளுக்கு எதிராக போராட தேநீர் உதவுகிறது. டீ குடிப்பதனால் உடல் எடை கூடுவதில்லை. உண்மையில் டீ குடித்தால் உடல் எடை சீராக இருக்கும். பால் மற்றும் சர்க்கரை இல்லாமல் குடிக்கும் டீயில் கலோரி என்பதே இல்லை.
 
உடல் எடை குறைத்தல், மூளை சுறுசுறுப்பு மற்றும் வாய் ஆரோக்கியத்துக்கும் டீ ஏற்றது. டீ உடலில் தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் பானமாகவும் திகழ்கிறது. தினந்தோறும் 3 முதல் 4 கப் டீ பருகுவது ஆரோக்கியமானது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலணிகள் இல்லாமல் வெறும் காலில் நடப்பது நல்லதா? ஆனால் மருத்துவர்களின் எச்சரிக்கை என்ன?

ஒரே சமயத்தில் இதய வால்வு மாற்று சிகிச்சை, பெருந்தமனி ஒட்டு சிகிச்சை! - சிம்ஸ் மருத்துவமனை சாதனை!

பிரிட்ஜ் எல்லாம் வேண்டாம்.. மண்பானை தண்ணீர் குடித்தால் இவ்வளவு பயன்கள் இருக்குது..!

இரட்டை நுரையீரல் மாற்று சிகிச்சையை வெற்றிகரமாக செய்து காட்டிய ரேலா மருத்துவமனை!

அடுத்த கட்டுரையில்
Show comments