Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினமும் தவறாமல் ஆயில் புல்லிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன...?

Webdunia
தினமும் தவறாமல் ஆயில் புல்லிங் செய்வதால், உடம்பில் உள்ள நச்சு தன்மை நீங்கி இயற்கையான மற்றும் அழகான முகப்பொலிவை பெறலாம்.

ஆயில் புல்லிங் செய்தால் உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுவதும், பல் சம்மந்தமான பிரச்சனை மற்றுமின்றி பல உடல் தொடர்பான பிரச்சனைகளையும்  போக்குகிறது.
 
ஆயில் புல்லிங் இரவு உணவுக்குப்பின் தூங்குவதற்கு முன் அல்லது காலையிலும் செய்யலாம். தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் 2 முதல் 3  ஸ்பூன்கள் வாயில் வைத்து 15 முதல் 20 நிமிடம் வரை வாயில் அனைத்து இடங்களில் படும்படியாக கொப்பளிக்க வேண்டும். 
 
எண்ணெய்யை வெள்ளை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறம் ஆகும் வரை கொப்பளித்து திறந்த வெளியில் துப்பி விடவும். ஆயில் புல்லிங் செய்வதற்கு  நல்லெண்ணெய் பயன்படுத்துவது மிகவும் நல்லது. காலையில் ஆயில் புல்லிங் செய்த ஒரு மணி நேரத்திற்கு பின்னரே காலை உணவு சாப்பிடவேண்டும்.
 
நாம் தினமும் சாப்பிடும் உணவுகளில் சில, வாய்க்குள் தங்குவதாலும், புகைப்பழக்கத்தாலும் பிற சில காரணங்களாலும் வாய்க்குள் பாக்டீரியா தங்க வாய்ப்புகள்  அதிகம். அவை வாய் துர்நாற்றம், சொத்தைப்பல், ஈறு வீக்கம் ஆகிய நோய்களுக்கு வலி வகிக்கிறது. ஆயில் புல்லிங் செய்வதால் எச்சில் சுத்தமாவதோடு வாய்  ஆரோக்கியமாகும்.
 
தைராய்டு பிரச்சனை உள்ளர்களுக்கு கூட ஆயில் புல்லிங் சிறந்த நிவாரணி. அவர்கள் ஆயில் புல்லிங் செய்வது மூலம் தைரொய்ட் சுரபிகள் சீராக சுரக்கப்படுகிறது.
 
நல்லெண்ணெய் பயன்படுத்தி ஆயில் புல்லிங் செய்வதனால், உடம்பு குளிர்ச்சி பெற்று கண்களில் உள்ள நரம்புகள் சீராகிறது. இதன்மூலம் கண்பார்வை பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரியான நேரத்தில் சரியான உணவுகள்.. உடல்நலனை மேம்படுத்த சில டிப்ஸ்..!

குழந்தைகளை மண்ணில் விளையாட விடுங்கள்.. ஆரோக்கிய டிப்ஸ்..!

ஏசியில் நீண்ட நேரம் இருந்தால் இளமையிலேயே வயதான தோற்றம் ஏற்படுமா? அதிர்ச்சி தகவல்..!

ஆரோக்கியத்தை கெடுக்கும் இன்றைய பழக்க வழக்கங்கள்.. முக்கிய தகவல்கள்

சிறுநீரில் வெள்ளை நிற நுரை இருந்தால் ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments