Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களை தடுக்க நாம் செய்ய வேண்டியவை...!

Webdunia
மழைக்கால நோய்கள் குறித்தும் அதன் தன்மை குறித்தும் அறிந்து கொண்டால் நோய்கள் வரும் முன் தடுக்கலாம், நாம் மழைக்காலத்தில்  வரும் நோய்கள் பற்றியும் அதை வராமல் எப்படி தடுக்கலாம் என்பது பற்றியும் பார்ப்போம்.
மழைக்காலம் ஆரம்பித்துவிட்டாலே, சாதாரண சளி, காய்ச்சல் முதல் டெங்கு ஜுரம், தொற்றுநோய்கள் வரை படையெடுக்க ஆரம்பித்துவிடும்.  நோய்க்கிருமிகள் பரவ, மிகவும் சாதகமாக இருக்கும் குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமான சூழ்நிலையும்தான் இதற்குக் காரணம்.
 
ஆங்காங்கே நீர் தேங்குவதால், கொசு மற்றும் ஈக்கள் மூலம் பரவும் பாதிப்புகளும் அதிகரித்துவிடுகின்றன. மழைக்காலப் பாதிப்பில் இருந்து  தப்புவது கடினம்.
 
ஆஸ்துமா, நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  மூச்சுவிட மிகவும் சிரமமாக இருக்கும். நெற்றி  மற்றும் கன்னங்களில் இருக்கும் சைனஸ் அறைகள், தொற்று காரணமாக பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். இதனால், சைனஸ் தலைவலி  வரலாம்.
 
மழைக்காலம் என்றாலே பெரிதும் பரவும் நோய் மலேரியா. இந்த வகைக் கொசுக்கள் தண்ணீர் தேங்கும் இடத்தில் இனப்பெருக்கமாகிறது.  மலேரியாவுக்கு அடுத்தபடியாக, டெங்குவைப் பரப்பும் ‘ஏடிஸ் எஜிப்டி’. இந்தக் கொசு, அசுத்தமான நீர் நிலைகளில் வாழாது. இதனால்  வீட்டை சுற்றி தேங்கும் நீர்களை முற்றிலுமாக அகற்ற வேண்டும். 
 
சிக்குன்குனியா காய்ச்சல் வருவதற்கும் ஏடிஸ் ஏஜிப்டி வகை கொசுதான் காரணமாக இருக்கிறது. சிக்குன்குனியா வந்தால், காய்ச்சல் மற்றும்  உடலில் உள்ள மூட்டு இணைப்புகளில் கடுமையான வலி போன்றவை ஏற்படும். 
 
எலியின் சிறுநீர் வழியாக எலிக்காய்ச்சல் பரவுகிறது. இந்தக் கிருமித்தொற்று உள்ள சிறுநீர், மழை நீரில் கலக்கும்போது, அது மனிதர்களுக்குப்  பாதிப்பை ஏற்படுத்திவிடும். 
 
செய்ய வேண்டியவை: 

மழைக்காலத்தில் டான்சில் மற்றும் சைனஸ் நோய்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக பதிப்புகள் ஏற்படும். இவர்கள் தினமும் உப்பு கலந்த  நீரால் தொண்டை வரை கொப்பளிக்க வேண்டும்.
 
வீட்டை விட்டு வெளியே சென்று வீடு திரும்பியதும், வெதுவெதுப்பான நீரில் கால்களை நன்கு கழுவ வேண்டும். வீட்டைச் சுற்றி நடப்பதாக  இருந்தாலும், காலணி அணியாமல் செல்லக் கூடாது.
 
தெருவில் விற்கும் உணவுகள், நீண்ட நாட்கள் ஆன திண்பண்டங்கள் முதலியவற்றை தவிர்ப்பது நல்லது.
 
இந்தப் பிரச்னைகள் வராமல் இருக்க, வெளி இடங்களில் சுகாதாரமற்ற தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் அருந்துவதையும் ஐஸ்க்ரீம்  சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். 
 
அடிக்கடி ஆவி பிடிப்பது, மூச்சுப் பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் சளி, இருமல் பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.
 
தண்ணீரை கொதிக்க வைத்து பருகி, சுத்தமான, ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொண்டு, சுகாதாரமான சுற்றுச்சூழலில் வாழ்ந்தால் பெரும்பாலான நோய்களை தடுத்துவிடலாம்.
 
நிலவேம்பு, பப்பாளி இலைச்சாறு, ஆடாதொடை போன்ற சித்தமருத்துவ மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments