Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க வேண்டுமா...?

Webdunia
சீரகம்: 1 ஸ்பூன் சீரகத்தை 3 வேளைக்கு சேர்த்து சாப்பிடலாம் அல்லது சீரகத்தை நீர் மோரில் கலந்தும் குடிக்கலாம். இந்த முறையை சரியாக பின்பற்றுவதன் மூலம் 3 மடங்கு உடல் கொழுப்பை எளிமையாக கரைக்கலாம்.

ஊறவைத்த வெந்தயம்: வெந்தயத்தை ஊறவைத்து மறுநாள் அந்த வெந்தயத்தை மென்று சாப்பிட்டு பின் அந்த ஊறவைத்த நீரை குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்தால் உடலிலுள்ள கொழுப்புகள் தானாகவே கரையும்.
 
பேரிக்காய்: பேரிக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதை உணவிற்கு முன் சாப்பிட்டு வந்தால், நாம் சாப்பிடும் உணவில் உள்ள கொழுப்பு உடலில்  தங்குவதைத் தடுப்பதுடன், உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கிறது.
 
முருங்கை இலைச்சாறு: முருங்கை இலை அதிக இரும்புச் சத்து கொண்டது. அத்துடன் கொழுப்பை கரைத்து உடல் இளைக்கவும் உதவுகிறது. தினமும்  இருவேளையில் முருங்கை இலைச்சாறு இரண்டு டீஸ்பூன் காலை மாலை சாப்பிட உடல் எடை குறையும்.
 
பட்டை: தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். மேலும் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.
 
தக்காளி: உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள் தினமும் நிறைய தக்காளி சாப்பிடுவதுடன் தக்காளி ஜூஸ் அல்லது சூப் குடிக்க வேண்டும். இதிலுள்ள அசிடிக்  அமில பண்புகள் குடலில் சேரும் கொழுப்பை வேகமாக கரைக்க உதவுகிறது.
 
இஞ்சி மற்றும் பூண்டு: இஞ்சி மற்றும் பூண்டு கலந்த உணவுகளை தினமும் 3 முறையாவது சேர்த்துக் கொள்ள வேண்டும் அல்லது சூப், ரசம் செய்து கூட தினமும்  சாப்பிடலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments