Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட வெட்டிவேர்...!!

Webdunia
வெப்ப மயமான நாடுகளில், பாக்டீரியாக்கள் மற்றும் நுண் கிருமிகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். அவைகள் அதிகமான சூட்டில் பெருகி வளர்கின்றன. ஆகையால், காயங்கள் ஏற்படும் போது இந்த நுண் கிருமிகள் அவற்றுள் நுழைந்து ஆறவிடாமல் செய்கின்றன.

இதற்கான தீர்வு தான் இந்த வெட்டிவேர் எண்ணெய். இந்த எண்ணைய்யை காயங்களில் தடவுவதன் மூலம் பாக்டீரியா மற்றும் நுண் கிருமிகளை செயலிழக்க  செய்கின்றன. இந்த எண்ணெய் வெளியுறுப்புகள் மற்றும் உள்ளுறுப்புகள் இரண்டிலும் காயங்களை குணமாக்குகின்றன.
 
உடலுக்கு வெட்டிவேர் டானிக் கொடுப்பதால் உடலின் எல்லா செயல்பாடுகளையும் சீரமைக்கிறது. செரிமானம், சுவாசம், நோயெதிர்ப்பு, நரம்பு, நாளமில்லா சுரப்பி,  போன்ற எல்லா உறுப்புகளையும் சரிபடுத்துகிறது. இந்த டானிக் உடலை சீர்படுத்தி, புத்துணர்ச்சி அடைய செய்கிறது. உடலுக்கு சக்தியை அதிகரித்து, நோயெதிர்ப்பு செயல்பாடுகளை அதிகரிக்கிறது.
 
வெட்டிவேர் நரம்பு எரிச்சல், துன்பங்கள், கொந்தளிப்புகள் மற்றும் கோபம், பதட்டம், வலிப்பு நோய் மற்றும் வெறித்தனமான தாக்குதல்கள், அமைதியற்ற தன்மை மற்றும் பதட்டம் போன்ற உணர்ச்சி வெடிப்புகளை கட்டுப்படுத்தி சாந்தமாக்கும். இது தூக்கமின்மையால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்குப் பயன் அளிக்கிறது.
 
பாக்டீரியாக்களால் ஏற்படும் சரும தொந்தரவுகளை போக்கி, வெள்ளை அணுக்கள் மற்றும் தட்டுகள் வளர்ச்சியை அதிகரிக்கிறது. இதனால் சருமம் பளபளப்பாக  இருக்கிறது.
 
வாத நோய், கீல்வாதம், தசை வலி, சரும வறட்சி மற்றும் சரும வெடிப்பு போன்றவற்றையும் தடுப்பதற்கு வெட்டிவேர் எண்ணெய் உதவுகிறது. பென்சாயின்,  மல்லிகை, லாவெண்டர் போன்ற வகை எண்ணெய்களுடன் இதனை கலந்தும் பயன்படுத்தலாம்.

தொடர்புடைய செய்திகள்

அவித்த வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

நெல்லிக்காய் இஞ்சு ஜூஸ் குடித்தால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

கோடை காலத்தில் சூவையான பலாப்பழ பாயாசம் செய்வது எப்படி?.

சர்க்கரை நோயாளிகள் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?

வெயில் காலத்தில் காலை வேளையை சிறப்பாக துவங்க இந்த உணவுகளை எடுத்துக்கலாம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments