Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்ணின் கீழ் உள்ள கருவளையத்தை எளிதில் விரட்ட...!

Webdunia
கருவளையம் இருக்கும்போது முகத்தின் அழகே கெடும். கருவளையம் வருவதற்கு முழு காரணம் நம்முடைய பழக்கவழக்கக்களே. கண்களுக்கு கீழ் உள்ள தோல் அதிகமாக சுருக்கம் அடைந்து காணப்படுவதுதான். அந்த சுருக்கமே கருப்பு நிறமாக மாறி கருவளையத்தை  ஏற்படுத்தும்.
கருவளையம் நீங்க:
 
* தேங்காய் எண்ணெயில் மஞ்சள் குழைத்து, தினமும் கண்களை சுற்றி பூசி 10 நிமிடம் கழித்து குளித்தால் கருவளையம் குறையும்.
 
* விட்டமின் ஈ ஆயில் கொண்டு கண்களின் கீழ் தடவலாம். 
 
* உருளைக்கிழங்கிற்க்கு இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை உண்டு. இரவில் ஒரு சிறிய அளவுள்ள உருளைக்கிழங்கு சாறை பஞ்சில்  நனைத்து எடுத்து கண்களுக்கு கீழ் 15 நிமிடங்கள் வைத்து பின் கழுவ வேண்டும்.
 
* ரோஸ்வாட்டருடன் கடலைமாவு கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும், வாரம் இருமுறை செய்து வரலாம்.
 
* தக்காளியை அரைத்து அதனை கண்களுக்கு கீழ் வைத்து 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
 
* வெள்ளரிக்காயை வட்டத்துண்டுகளாக வெட்டி கண்களின் மீது வைக்கலாம். கண்களுக்கு குளிர்ச்சியும், சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.
 
* சோற்றுக் கற்றாழை ஜெல் தடவி வரலாம். இதில் உள்ள சத்துக்கள் கண்களை சுற்றி உள்ள சருமத்திற்கு ஊட்டம் அளிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

வெந்தய பொடியை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

உடலுக்கு நன்மை தரும் சுவையான ராகி பாயாசம் செய்வது எப்படி?

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments