Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரத்தத்தை சுத்திகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் துளசி !!

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (12:57 IST)
துளசி ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை அதிகரித்து உடலின் செல்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்து நரம்புகளை வலுவாக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். ஹார்மோன்களை சீராக்கும். தூக்கமின்மையை போக்கும்.


தோல் நோய்களான படை, சொரி, சிரங்குகளை துளசி இலையால் குணமடையச் செய்யலாம். துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் தோல் நோய்கள் அண்டாது.

துளசி இலைகளை தண்ணீரில் ஊறப்போட்டு சில மணிநேரம் கழித்து அந்த தண்ணீரை குடித்து வந்தால் நாட்பட்ட வாயு, வயிற்று உப்பிசம் நீங்கும்.

துளசி இலைச்சாறு ஒரு சக்தி மிகுந்த கிருமி நாசினியாகவும், ரத்தத்தை சுத்திகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது. காற்றை சுத்தப்படுத்தி, சுவாசத்தை சீராக்கி சளித்தொல்லையை போக்கும்.

தினமும் 20 துளசி இலையை சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் ஆரம்பநிலையில் உள்ள புற்று நோய் குணமாகும். தினமும் காலை, மாலை என இருவேளை ஒரு கப் தயிருடன் 20 துளசி இலையை சாப்பிட்டால் கேன்சர் குணமாகும். தினமும் ஒரு துளசி இலை சாப்பிட்டால் புற்றுநோய் அண்டாது என்ற ஒரு பழமொழியே உண்டு.

துளசி இலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டுக்கு எதிராக செயல்பட்டு ஆண்மை குறைவை ஏற்படுத்தும் என்ற தவறான கருத்து மக்களிடம் உள்ளது. துளசி உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி தேவையற்ற வெப்பத்தை குறைக்குமே தவிர பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது.

பெண்களுக்கு மாத மாதம் ஏற்படும் மாத விலக்கு காலங்களில் பெண்கள் குளித்து முடித்த பின் துளசி விதையை நீருடன் ஊறவைத்து நெல்லிக்காய் அளவு 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கருப்பை தூய்மை அடைந்து கருப்பை பலம் பெறும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments