Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதங்களில் ஏற்படும் வெடிப்புகளை நீக்கி மென்மையாக வைத்திருக்க டிப்ஸ்...!

Webdunia
பாதங்களில் ஏற்படும் சிறிய பிளவுகளுக்கு பித்த வெடிப்பு என்று பெயர். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும், அசுத்தம் காரணமாகவும், இந்த வெடிப்புகள் ஏற்படுகின்றன. 
பாத சருமத்தை மென்மையாக்க, பாதங்களை வெது வெதுப்பான தன்ணீரில் 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு சொரிக்கல்லை பயன்படுத்தி பாதத்தில் உள்ள இறந்த செல்களை, மெதுவாக தேய்த்து எடுக்கவும். பாதங்களுக்கான நல்ல மாய்ஸ்சுரைசிங் க்ரீமை தடவி, 20 நிமிடங்கள்  வரை, அவை பாதங்களில் நன்றாக ஊறும் படி செய்யலாம்
 
குதிகால் வெடிப்பு பிரச்சனையை போக்க எலுமிச்சை பழத்தை எடுத்து இரண்டாக வெட்டி, அதிலிருக்கும் சாறை முற்றிலுமாக எடுத்து  விடவேண்டும். எலுமிச்சை தோலை கொஞ்ச நேரம் காய வைத்து அதை உங்கள் குதிக்காலில் படும்படி வைக்கவும். உங்கள் குதிகால்  வெடிப்புகளை முழுவதும் கவர் செய்யும்படியாக வைக்கவேண்டும். பிறகு அந்த எலுமிச்சை தோலின் நிலை விலகாத வன்ணம், சாக்ஸை அணிந்துக் கொள்ளுங்கள். இது சருமத்தின் வறட்சி மற்றும் வெடிப்புகளை சரி செய்ய உதவும்.
 
பப்பாளி பழத்தை நன்கு அரைத்து பாதங்களில், வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் குதிகால் வெடிப்பு குணமாகும்.
 
மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலரவிடவேண்டும். பின்னர் தண்ணீரில் கழுவி  நாளடைவில் குதிகால் வெடிப்பு நீங்கும்.
 
குதிகால் வெடிப்பு நீங்க, கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும்.  அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து பின் பாதத்தை சொரசொரப்பான பிரஸ்சை கொண்டு தேய்த்து கழுவினால் பாதத்தில்  காணப்படும் இறந்த செல்கள் உதிர்ந்துவிடும். இதனால் வெடிப்பு ஏற்படுவது நிற்பதோடு பாதம் மென்மையாகவும் இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments