Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா இஞ்சியில...

Webdunia
இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும். தேன் கலந்த இஞ்சி சாறு புற்றுநோய் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும். எப்படியெனில் இதில் உள்ள  ஆன்டி-ஆக்ஸிடன்ட் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்துவிடும்.

 
இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
 
இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப  கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.
 
இ‌ஞ்‌சியை, த‌ட்டி தே‌னீ‌ர் கொ‌தி‌க்க வ‌ை‌க்கு‌ம் போது அ‌தி‌ல் சே‌ர்‌த்து கொ‌தி‌க்க வை‌த்து தே‌‌னீ‌ர் பருகலா‌ம். சுவையு‌ம் ந‌ன்றாக  இரு‌க்கு‌ம், உடலு‌க்கு‌ம் ந‌ல்லது.
 
‌சில சமைய‌ல் வகைக‌ளி‌ல் இ‌ஞ்‌சியை ம‌சி‌த்து‌ப் போ‌ட்டு செ‌ய்வா‌ர்க‌ள். அதுபோ‌ன்ற உணவு வகைக‌ள் வ‌யி‌ற்றை‌க்  கெடு‌ப்ப‌‌தி‌ல்லை.
 
இஞ்சி தேன் கலவை செரிமானத்தை மேம்படுத்துவதோடு, வயிற்றில் தங்கியுள்ள கொழுப்பைக் கரைக்கும். இதனால் தொப்பை  குறையும். நல்ல மாற்றத்திற்கு தொடர்ந்து 40 நாட்கள் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வர வேண்டும்.
 
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
 
இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
 
இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
 
இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும். 
 
இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.
 
காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை  பெறும்.
 
பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒரு கப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு  வலி தீரும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முழங்கால் செயற்கை தசைநார் சிகிச்சை! தமிழகத்தில் முதலிடம்! – ரெலா மருத்துவமனை!

சோம்பை உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் பயன்கள்..!

பிரைடு ரைஸ் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு ஏற்படும் தீங்குகள்..!

உடலுக்கு தேவையான புரதச் சத்துக்கள் உணவுகள் என்னென்ன?

காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்