Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பருமனான வயிற்றை கரைத்து பலன் தரும் பச்சை பூண்டு!

Webdunia
இதய பிரச்சனைகளான ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, ஆன்ஜியோ கொடுமைகளில் இருந்து தப்பிக்கவும், உடல் உறிஞ்ச தகுதியில்லாத கழிவாக தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்வும், பானை வயிற்றை தட்டை ஆக்கவும் பச்சை பூண்டு மிகவும்  சிறந்தது.
பூண்டில் இருக்கும் ஒரு இயற்கை அமிலம் ஒப்பற்ற மருத்துவ குணம் உடையது. சமைத்தால் அதன் இயல்பு தன்மை வெகுவாக பாதிக்கப்படும்.  இயற்கையாகவே, சமைத்து கெடாத பூண்டு துண்டங்களை நன்கு கடித்து  உமிழ் நீரில் செரிமானம் செய்தலே, பூண்டை உணவாகவும், மருந்தாகவும்  பயன்படுத்தும் சரியான முறையாகும்!
 
பத்து முழு பூண்டை உரித்து, தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக்கி, சுத்தமான பருத்தி துணியில் 8-லிருந்து 12 மணி நேரம்  நிழலில் காய வைத்த பின், அதனுடன் 5 முழு எலுமிச்சை பழங்களின் சாற்றோடு, மூழ்கும் வரை தேன் ஊற்றி, குறைந்தது 50 நாட்கள் ஊறவைத்த பின், காலை மாலை 1/2 ஸ்பூன் பூண்டு துண்டங்களை சாப்பிட்டு வர ஆரோக்யத்துடன் உடலை பேணிகாக்கலாம்.
 
சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும். அடுத்த நாள் தானாக உடலும் மனமும் நாடும் ஒரு பதார்த்தமாக விளங்கும். 6 மாதத்திற்கு ஒரு முறையாவது 48 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வர, நம்மை நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோம்பை உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் பயன்கள்..!

பிரைடு ரைஸ் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு ஏற்படும் தீங்குகள்..!

உடலுக்கு தேவையான புரதச் சத்துக்கள் உணவுகள் என்னென்ன?

காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் என்னென்ன?

ஆஸ்துமா நோய் ஏற்படுவது ஏன்? குணப்படுத்த என்ன வழிகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments