Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏராளமான மருத்துவ பயன்களை உள்ளடக்கிய கரும்பு சாறு !!

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (10:06 IST)
கரும்பில் ஏராளமான மருத்துவ பயன்களை உள்ளடக்கியது. உடனடி ஆற்றலுக்கு கருப்பு சாறு சிறந்த ஆதாரமாகும்.

                                                                                                          
கரும்பு சாறு அருந்துபவர்களுக்கு இதயம் ஆரோக்கியம் மேம்படும். எனவே அவ்வப்போது கரும்பு சாறு பருகி வந்தால் இதயத்திற்கு ஏற்படும் அழுத்தங்கள் நீங்கி, இதய பாதிப்பு, மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கும்.

மூளை ஆரோக்கியமாக இருப்பது அவசியம். நாம் கரும்பு சாற்றை அருந்துவதால் மூளையின் செயல்பாடு அதிகரித்து மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

ஒரு டம்ளர் கரும்பு சாற்றில் சிறிதளவு சுண்ணாம்பு மற்றும் கருப்பு உப்பு சேர்த்து பருக வேண்டும். இவ்வாறு பருகி வந்தால் தொண்டையில் இருக்கும் கிருமிகளை அழித்து தொண்டை புண் குணமாக உதவும்.

செரிமான பிரச்சனை இருந்தால் கரும்பு சாறு குடிப்பது நல்லது. ஏனெனில் கரும்பு சாறில் உள்ள பொட்டாசியம் உங்கள் வயிற்றில் செரிமான சுரப்பிகளை சுரக்க செய்து, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

சிலருக்கு பற்களின் ஈறுகள் மிகுந்த சேதமடைந்து, பற்கள் வலிமை இழந்து காணப்படும். கரும்பில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிம சத்துக்கள் உள்ளன. எனவே கரும்பு சாப்பிடுவதால் பற்கள் மற்றும் ஈறுகளுக்கு வலிமை அளிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments