Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்மைக் குறைவை தடுக்கும் கீரைகள்

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2015 (19:55 IST)
ஆண்மைக் குறைவை போக்க கீரைகளே சிறந்த வழி என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.  


 

நறுந்தாளி நன்முருங்கை, தூதுவளை, பசலை,
வாளிளறு கீரை நெய்வார்த்துண்ணில் யாழி என 
விஞ்சுவார் போகத்தில் பெண்களெல்லாம்
பின் வாங்கிக் கேள்”
 
இந்தியாவில் சுகாதாரத்துறை ஆய்வு கணக்கெடுப்பில் இன்றைய ஆண்களிடம் 75% வீதம் ஆண்மைக் குறைவு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 
 
“கொக்கோகம்” என்ற காம சாஸ்த்திரத்தை முனிவர்களால் உருவாக்கப்பட்டு உலகிற்கு அளித்த நமது இந்தியாவில் இப்படி ஒரு நிலை. இன்றைய கலாச்சார சீரழிவு மற்றும் FAST FOOD எனப்படும் உணவு வகைகளாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்மைக் குறைவினால் பல குடும்பங்களில் கணவன், மனைவியிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி விவாகரத்து வரை செல்ல இதுவும் ஒரு காரணமாக உள்ளது. 



 

 
ஆண்மைக் குறைவைப் போக்கும் அற்புதமான வழி முறைகளை சித்தர்கள் வகுத்து அளித்துள்ளனர். இவற்றுக்கான உணவுகள் மற்றும் மருந்து முறைகள் ஏராளமாக உள்ளது. அதில் ஒரு முறை தான் மேலே உள்ள பாடலில் உள்ளது.
 
“நறுந்தாளி என்பது தாளிக்கீரை ஆகும். நன்முருங்கை என்பது முருங்கைக்கீரை அடுத்து தூதுவளை, பசலை கீரை, அரைக்கீரை”
 
இந்த ஐந்து வகை கீரைகளை பசு நெய் ஊற்றி சமைத்து உண்டு வர யாழி என்ற (பத்து சிங்கத்தின் பலம் கொண்டது) விலங்கின் பலம் உடலுக்கு கிடைக்கும் என சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவைகளை சமைத்து உண்டு அனைவரும் உடல் பலத்துடன் வாழலாமே!. 

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

Show comments