Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயனுள்ள சில இயற்கை வைத்திய குறிப்புகள் !!

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (12:46 IST)
தயிரை உடம்பில் தேய்த்தது குளித்து வந்தால் வேர்க்குரு வராது. வேர்க்குரு வந்தாலும் குணமாகிவிடும்.


உலர் திராட்சைப் பழத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் இதய நோய் குணமாகும். மாதவிடாய் கோளாறும் தீரும்.

புடலங்ககாயை சமைத்து உண்டு வந்தால் உடல் எடை குறையும் மற்றும் மலச்சிக்கல் தீரும். கொத்தமல்லி விதையை (தனியா) தண்ணீரில் கொதிக்கவைத்து ஆறியபின் அந்த தண்ணீரில் கண்களை கழுவி வந்தால் கண்கள் குளிர்ச்சியாக இருக்கும்.

சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் இவை அனைத்தையும் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி இரவில் ஒரு டம்ப்ளர் குடித்து வந்தால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம்.

வெங்காயத்தை நெருப்பில் சுட்டு சாப்பிட்டு வந்தால் பித்தநோய்கள் தீரும். புடலங்காயின் இலைச்சாறு குழந்தைகளுக்கு காலையில் கொடுத்தால் கக்குவான், இருமல் போன்ற நோய்கள் குணமாகும் .

அருகம்புல் சாற்றுடன் மோர் கலந்து குடித்து வந்தால் நீரிழிவு (சர்க்கரையின் அளவு) குறையும். கை ,கால் சுளுக்கு உள்ளவர்கள் மிளகு தூளும், கற்பூரத்தையும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரை துணியில் நனைத்து சுளுக்கு உள்ள இடத்தில் தடவினால் சுளுக்கு குணமாகும். அல்லது டர்ப்பன்டைன் எண்ணையைத் தடவினாலும் சுளுக்கு குணமாகும்.

முள்ளங்கியை சமைத்து தினதோறும் சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட மூலநோயும் குணமாகும். பூசணிக்காயை சமைத்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்கொதிப்பு, தலைச்சுற்றல் போன்ற நோய்கள் வராமல் கட்டுப்படுத்தலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments