Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயற்கை மருத்துவத்தில் மூட்டு வலிக்கு சில நிவாரணங்கள்...!

Webdunia
மூட்டு வலி பெரும்பாலும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத்தான் ஏற்படுகிறது. பெரும்பாலும் மூட்டு வலி வருவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

சரியான ஊட்டச்சத்து இல்லாத உணவுகள், போதிய கால்சியம் உடலில் இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, உடல் எடையை சரியான அளவில் பராமரிக்காதது, உடலில் தண்ணீர் பற்றாக்குறை போன்றவைகளால் மூட்டுவலி ஏற்படுவதாக கூறப்படுகிறது.
 
குப்பைமேனி இலையுடன் சதகுப்பை விதையை அவித்துச் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைத்துப் பத்துப் போடலாம். வெங்காயத்தை, கடுகு எண்ணெய்  உடன் சேர்த்து அரைத்துப் பத்துப் போடலாம்.
 
ஊமத்தை இலை, நொச்சி இலை, சிற்றாமணக்கு இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கிக் கட்டலாம். பிரண்டையின் வேர்ப் பொடி, முடக்கத்தான் இலைப்  பொடி, தழுதாழை இலைப் பொடி, இவற்றைச் சம அளவு கலந்து, அரை ஸ்பூன் மிளகுத் தூளுடன் பாலில் சேர்த்து அருந்தலாம்.
 
சிற்றாமுட்டி, சுக்கை கைப்பிடி அளவு எடுத்து, நான்கு டம்ளர் நீர் சேர்த்து ஒரு டம்ளராக வற்றவைத்து 30 மில்லி அருந்தலாம். ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளைக் கால் கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்துப் பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
 
முடக்கத்தான் கீரையைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். தோசை மாவிலும் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். நம் முன்னோர்கள் வாரம் 2 அல்லது 3 நாட்களுக்கு முடக்கத்தான் கீரை தோசை சாப்பிடுவார்கள். அதைக் கடைப்பிடித்தால் மூட்டு  வலி வராது.
 
மூட்டு வலியின் ஆரம்பம் என்றால் உடனே குணம் கிடைக்கும். நாள்பட்ட வலி என்றால் கண்டிப்பாக 40 நாட்கள் சாப்பிட வேண்டும். வலியிலிருந்து விடுதலை  கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments