Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜீரணத்தை மேம்படுத்த உதவும் சில பொருட்கள்...!!

Webdunia
சீரகம்: சீரகத்தில் அதிகப்படியான எச்சிலை உற்பத்தி செய்யும் தன்மை உள்ளது. இது செரிமானத்தை சீராக நடைப்பெற வைத்து, அதனால் ஏற்படும் பல்வேறு வயிற்று பிரச்சினைகளை சரிசெய்யும். 
 

கிராம்பு: கிராம்பு இயற்கையான இரைப்பைக் குடல் வலி நீக்கியாகும். இது குடல் தசை இயக்கத்தை துரித்தப்படுத்துகிறது மற்றும் உமிழ் நீர் சுரப்பதையும்  அதிகப்பப்படுத்துகிறது. இதன் ஒரு வகையான கசப்புக் கலந்த காரமான சுவை, அதிகளவு உமிழ்நீர் சுரப்பதைத் தூண்டுவதால், செரிமானத்திற்கு உதவுகிறது. 
 
ஏலக்காய்: சளி, பித்தம், வாதம் ஆகிய மூன்று தோஷங்களையும் சரிசெய்யக் கூடிய ஒரே உணவு ஏலக்காய் என ஆயுர்வேத முறையில் கூறப்படுகிறது. இது செரிமானத்தை துரிதப்படுத்தி, வயிற்று வலியைக் குறைக்கும். குறிப்பாக அசிடிட்டியிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு, கொஞ்சம் ஏலக்காயை பவுடராக்கி, நீரில்  கொதிக்க வைத்து, ஆறிய பின்னர் அந்த நீரைக் குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.
 
புதினா: புதினா இலைகள் வாய் நறுமணத்திற்கும் மற்றும் பல்வேறு உணவுகளை நறுமண சுவைïட்டுவதற்கும் பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த இலை அசிடிட்டிக்கு நிவாரணம் தரும் ஒரு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது. இது வயிற்றில் அமிலத்தைக் குறைத்து, செரிமானத்திற்கு உதவுகிறது.
 
இஞ்சி: இஞ்சி உணவை உறிஞ்சும் தன்மையை அதிகரித்து, விரைவாக செரிமானம் அடைவதற்கு வழிவகுக்கிறது. உணவிலுள்ள புரதச் சத்துக்களை உடைத்து, அவை  உடலில் சேர்வதற்கு உதவுகிறது. இஞ்சி, வயிற்றில் சீதம் சுரக்கும் அளவை அதிகப்படுத்துவதால், அமிலத் தாக்கத்தைக் குறைக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடையில் அதிகரிக்கும் நீர்க்கடுப்பு எனப்படும் சிறுநீர்ப் பாதை தொற்று: என்ன செய்ய வேண்டும்?

நடனம் ஆடினால் ரத்த அழுத்தம், மனச்சோர்வு பிரச்சனை சரியாகுமா? ஆய்வு முடிவு..!

கோடை வெயிலுக்கு உகந்த கம்பங்கூழ்.. என்னென்ன பலன்கள் தெரியுமா?

ஐஸ் கட்டி நீர் தெரபியால் கிடைக்கும் பலன்கள்..!

சைலண்ட் ஹார்ட் அட்டாக்.. கவனிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments