Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நினைவாற்றலை அதிகரிக்கும் சில இயற்கை மருத்துவம்....!

Webdunia
நினைவாற்றல் நாளுக்கு நாள் வளர வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து அதிகாலையில் தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் அற்புதமாய் வளரும். 
நினைவாற்றல் வளர வெண்ணையுடன் வில்வ பழத்தின் உட்பகுதி எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட மறதி குறைந்து நினைவாற்றல்  வளரும்.
 
இலந்தைப்பழத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொண்டு அதனுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர மூளை சுறுசுறுப்படைந்து  நல்ல நினைவாற்றலைப் பெறலாம்.
 
கருஞ்சீரகம் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. பெரியவர்கள் கருஞ்சீரகத்தின் பெருமையை எடுத்து காட்ட சாவைத் தவிர மற்ற அனைத்து  நோய்களுக்கும் கருஞ்சீரகதை மருந்தாக பயன்படுத்தலாம். என்று கூறுவர்.
 
நினைவாற்றல் வளர காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பத்து கருஞ்சீரகத்தை மென்று சாப்பிட வேண்டும். இவ்வாறு தினமும்  கருஞ்சீரகத்தை மென்று வந்தால் ஞாபக சக்தி நன்கு வளரும்.
 
தினமும் காலை ஒரு தேக்கண்டி நாயுருவி வேரின் சாறுடன் ஒரு தேக்கரண்டி கரிசலாங்கன்னி வேரின் சாறை சேர்த்து பருகினால் மூளை நரம்பு பலமடைந்து நினைவாற்றல் பெருகும்.
 
வல்லாரைக் கீரையை வாரம் ஒரு முறை கூட்டு வைத்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் வளர்ந்து மறதி குறையும்.
 
பசலைக் கீரை  உடலுக்கு மிகவும் நல்லது. எந்த காலநிலைகளிலும் இது எளிதாக வளரும். கோடி போன்று படரக் கூடிய தன்மை கொண்டது. வாரம் ஒரு முறை பசலைக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் நினைவாற்றல் அற்புதமாய் வளரும்.
 
நினைவாற்றல் பெருக பாதாம் பருப்பு, வெண்டைக்காய், தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால்  நினைவாற்றல் பெருகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments