Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காய்ச்சலை போக்க உதவும் சில ஹோம் டிப்ஸ்!!

Webdunia
திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (15:57 IST)
ஈரத்துணி நனைத்து தலையில் போடுவதால், உடல் வெப்பநிலை கட்டுக்குள் வைக்க மிகவும் உதவியாக இருக்கும்.


அதிகப்படியான வெப்பநிலையால் நீர்ச்சத்து குறைந்து சருமத்தில் வறட்சி ஏற்படக்கூடும். குழந்தைகளை தண்ணீர் அதிக அளவில் பருக வைப்பது நல்லது. ஆறு மாதத்திற்கு கீழே உள்ள குழந்தை என்றால் அடிக்கடி தாய்ப்பால் தர வேண்டும்.

ஆறு மாத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு தண்ணீர்  மற்றும்  பழச்சாறு போன்றவற்றை பருக கொடுக்கலாம். தண்ணீர் கொதித்து ஆறவைத்த தண்ணீராக இருப்பது நல்லது.

உடலின் வெப்பநிலை குறைக்க வெங்காயம் பெரிது உதவும். வெங்காயத்தை வட்டமான பெரிய துண்டுகளாக நறுக்கி குழந்தையின் பாதத்தில் நன்றாக  2 நிமிடம் தேய்க்க வெப்பநிலை குறையும். ஒரு நாளைக்கு இரண்டு முறை இதை செய்யலாம்.

குழந்தைகளுக்கு காய்ச்சல் இருப்பது தெரிந்தவுடன் தண்ணீரில் துளசி இலைகளை போட்டு கொதிக்க விடலாம். ஆறியவுடன் சிறிது சிறிதாக அந்த தண்ணீரை கொடுக்க நல்ல பலன் கிடைக்கும். காய்ச்சல் நன்கு குணமாகும் வரை துளசி தண்ணீரை  கொடுக்கலாம்.

1 டே.ஸ்பூன் எலுமிச்சை சாறை  தண்ணீர் கலக்காமல் எடுத்து கொள்ளவும். இதனுடன் 1 டே.ஸ்பூன் தேன் மற்றும் 4 சொட்டு இஞ்சி சாறு சேர்க்கவும். காலை, மாலை இரு வேளை கொடுக்க நல்ல பலன் கிடைக்கும்.

அரை கப் தண்ணீரில் 25 உலர் திராட்சைகளை ஒரு மணி நேரம் ஊற வைக்கவேண்டும். நன்கு ஊறியதும் திராட்சை மிருதுவாகிவிடும். இதனை அரைத்து பிழிந்து சாறு எடுத்து எலுமிச்சை சாற்றுடன் கலந்து காலை, மாலை இருவேளை கொடுக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments