Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் இத்தனை நன்மைகளா...!!

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (09:40 IST)
கேரட்டை பச்சையாக சாப்பிட்டால் தான் அதில் உள்ள அனைத்து சத்துக்களையும் நாம் முழுமையாக பெற முடியும். கேரட்டில் நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் அதிக அளவு உள்ளது.


கேரட்டில் இருக்கும் பீட்டா கரோட்டின் நமது உடலுக்கு சென்றவுடன் வைட்டமின்- ஏ வாக மாற்றம் அடைகிறது. இது கண் பார்வையை தெளிவாக்குகிறது. மேலும் மாலைக்கண் நோய் வராமல் இருக்கும். இதற்கு காரணம் விட்டமின் ஏ தான். கேரட் சாப்பிடுவதால் முகம் பொலிவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் கேரட்டை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் இன்சுலினை சீராக வைத்துக் கொள்ளலாம். ஆனால் அளவாக எடுத்து கொள்ள வேண்டும்.

கேரட்டில் நிறைந்து காணப்படும் பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது. ஒரு கேரட் தினமும் சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கலாம். இதன் மூலம் குடல் புண்கள் ஏற்படாது. இதய நோய்களும் வராது.

வைட்டமின் ஏ, சி, கே போன்ற உயிர்ச்சத்துக்கள், பொட்டாசியம் போன்ற தாதுப்பொருட்கள் கேரட்டில் அதிக அளவு உள்ளது. இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கல்லீரலுக்கு மிகவும் சிறந்தது. கேரட்டை மென்று சாப்பிட்டால் உடலில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும், பற்களில் இருக்கும் கரைகளையும் நீங்கும்.

வாயுத் தொல்லையால் அவதிப்படுவர்களுக்கு கேரட் ஜுஸ் மிகவும் நல்லது. இது பசியைத் தூண்டி, சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படுகிறது. சருமத்தில் அரிப்பு ஏற்பட்டால், கேரட்டைத் துருவி சாலட் செய்து சாப்பிடலாம்.

சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் எரிச்சலை குறைக்கவும், அந்த இடத்தில் உண்டாகும் புண்னை குணபடுத்தயும் கேரட்டை பச்சடியாக செய்து சாப்பிடலாம். இதன் மூலம் நமக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

HMPV தொற்று கர்ப்பிணிகளை பாதிக்குமா?

கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா? முக்கிய தகவல்..!

பெண்களுக்கு முகத்தில் ஏன் முடி வளர்கிறது? மருத்துவ காரணங்கள்..!

எச்.எம்.பி.வி. தொற்று பரவுவது எப்படி? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments