Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செக்ஸ் மூடுக்கு வேட்டு வைக்கும் புகைப்பழக்கம்

செக்ஸ் மூடுக்கு வேட்டு வைக்கும் புகைப்பழக்கம்

கே.என்.வடிவேல்
செவ்வாய், 23 பிப்ரவரி 2016 (06:33 IST)
செக்ஸ் மூடுக்கு முதல் எதிரியாக புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
 

 
தமிழகத்தில் மட்டும் இன்றி, உலகம் முழுக்க பலருக்கும் புகைபிடிக்கும் பழக்கம் தெரிந்தோ தெரியாமலே தொற்றிக் கொண்டுவிட்டது. இதை சிலர் விரும்பி செய்கின்றனர். ஆனால் பலர் விருப்பம் இன்றி புகைப்பிடிக்கின்றனர். காரணம், புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டுவிடமுடியாமல் தவிப்பது தான்.
 
குறிப்பாக, புகைப்பிடிக்கும் பழக்கம் பெண்களுக்கு பிடிப்பதில்லை. அதுவும் தங்களது துணைவியுடன் ஆண் செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது, புகை வாடை அடித்தாலே பலருக்கும் ரொம்மான்ஸ் மூட அவுட் ஆகிவிடும். இதனாலே, பல இனிய இரவுகள் பலருக்கும் சகப்பாக அமைந்து விடுகிறது.
 
ஒரு கட்டத்தில், ஆண் புகைபிடிக்கும் பழக்கதையும் விட்டுவிடமுடியாமல் தவிப்பதும், அதே வேளையில், தனது செக்ஸ் பாட்னருடன் இணைய முடியாமல் அதே புகைபிடிக்கும் பழக்கத்தால் தவிப்பதும் வாடிக்கையாக உள்ளது.
 
இந்த பிரச்சனைக்கு தீர்வு கோரி சென்னையில் உள்ள ஒரு பிரபல டாக்டரிடம் கேட்ட போது, அவர் நம்மிடம், ஏலக்காய் மணத்திற்கு மட்டுமல்ல மருந்துக்கும் உதவுகிறது. சிகரெட் எரியும்போது கசியும் "நிக்கோட்டின்" நஞ்சு தொண்டை, ஈறு, நாக்குகளில் படியும்போது கறை உண்டாவதுடன், அங்கிருக்கும் பூந்தசைகளை அரித்துப் புண்களை உண்டாக்கும். "ஏலக்காய்" இந்தப் புண்களை ஆற்றுவிப்பதுடன், நிக்கோட்டின் கறைகளையும் படியாமல் அப்புறப்படுத்துகிறது.
 
இன்னொரு அரிய பயனும் உள்ளது. சிகரெட் பிடிக்கும் எண்ணம் வரும்போதெல்லாம், ஒரு ஏலக்காயினை வாயிலிட்டுச் சுவைக்க, புகைக்கும் எண்ணம் விலகும். இதனைப் பல அன்பர்கள் பின்பற்றி சிலர் புகைப்பதையே விட்டுவிட்டனர் என்றார்.
 
எனவே, அதிக செலவு இன்றி எளிய வழியில் இந்த முறையை பயன்படுத்தி பயன்பெறலாமே. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பட்டாசு வெடிக்கும்போது விபத்து ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன?

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுமா?

தீவிர ஸ்ட்ரோக் / பக்கவாத பாதிப்புக்கான சிகிச்சைக்கு 24/7 கேத் லேப் – ஐ தொடங்கும் ரேலா மருத்துவமனை

பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!

பால், தேன் மற்றும் இனிப்புகளில் கலப்படத்தை வீட்டிலேயே எளிதாக கண்டுபிடிப்பது எப்படி?