Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்வேறு நோய்களுக்கு அற்புத நிவாரணம் தரும் சித்தரத்தை !!

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2022 (16:28 IST)
சாதாரண ஜுரம் மற்றும் சுவாச பாதிப்புகள் விலக, சில துண்டுகள் சித்தரத்தையை தூளாக்கி அத்துடன் அதே அளவு பனங்கற்கண்டை தூளாக்கி இவற்றை ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, அதில் சிறிதளவு தினமும் பாலில் கலந்து பருகிவர, ஜுரம் மற்றும் சுவாச பாதிப்புகள் யாவும் சரியாகிவிடும்.


குழந்தைகள் இருக்கும் வீடுகளில் சித்தரத்தையை கட்டாயம் வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும். அவைகளுக்கு சளி, இருமல் ஏற்படும்போது, சிறிதளவு சித்தரத்தையை தூளாக்கி, அரை தேக்கரண்டி தேனில் குழைத்து கொடுக்கவேண்டும்.

சிறு துண்டுகளாக வெட்டிய ஒன்றிரண்டு சித்தரத்தையை, மூன்று டம்ளர் தண்ணீரில் இட்டு கொதிக்கவைத்து, தண்ணீர் மூன்றில் ஒரு பங்காக சுண்டிவரும் வேளையில், நீரை எடுத்து வைத்துக் கொண்டு, தினமும் இருவேளை, சில நாட்கள் தொடர்ந்து பருகிவர, இருமல், தொண்டை கரகரப்பு நீங்கி நல்ல நிவராணம் அளிக்கும்.

குழந்தைகளை குளிக்கவைத்து தலை துவட்டிய பின்பு, சிறிதளவு சித்தரத்தை தூளை அவற்றின் தலை உச்சியில் தேய்த்தால் சளி பிடிக்காது.

சித்தரத்தை தூளை, தேனில் கலந்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர, தொண்டை புண், தொண்டை வலி, இருமல் போன்றவை விரைவில் குணமாகும்.

வாயு கோளாறு, இருமல், தலைவலி, காய்ச்சல், வாந்தி, சுவாச கோளாறுகளுக்கு இது நல்ல மருந்து. மேற்கண்ட பாதிப்பு கொண்டவர்கள் 10 கிராம் சித்தரத்தையை நன்கு இடித்து 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பருகவேண்டும். இதற்கு வலியை நீக்கும்தன்மையும் உண்டு.

எலும்புகள் பலம் பெற நன்கு உலர்ந்த சித்தரத்தை மற்றும் அமுக்கிரா கிழங்கை எடுத்து இடித்து தூளாக்கிக்கொண்டு, இந்தப்பொடியை சிறிது தேனில் குழைத்து தினமும் இருவேளை என  நாற்பத்தெட்டு நாட்கள் சாப்பிட்டு வர, வலி குறைந்து நல்ல பலன் அளிக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பச்சை ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் ஏராளமான பலன்கள்..!

வேகவைத்த முட்டை தாவரங்களுக்கு நன்மை தருகிறதா? ஆச்சரிய தகவல்..!

எலும்பு மண்டலத்தை வலுவாக்க உதவும் பிரண்டை.. முக்கிய தகவல்கள்..!

உணவு பேக்கிங் செய்யப்படும் கருப்பு பிளாஸ்டிக் பொருட்கள் புற்றுநோயை உருவாக்குமா? அதிர்ச்சி தகவல்..!

Gen Beta குழந்தைகளுக்கு வைக்க சூப்பரான 10 பெயர்கள்! Names for Gen Beta Kids!

அடுத்த கட்டுரையில்
Show comments