சளி மற்றும் காய்ச்சலில் இருந்து விரைவில் குணமடைய எளிய வீட்டு வைத்திய குறிப்புக்கள் !!

Webdunia
தற்போது மழைக்காலமாக இருப்பதாலும் மற்றும் திடீரென வெப்பநிலை ஏற்படும். இந்த சீசன் மாற்றங்களால் சுகாதார பிரச்சினைகள் பலருக்கு ஏற்படும்.  இதனால் காய்ச்சல், சளி போற்ற தொற்று நோய் வருவது பொதுவான ஒன்றாகும்.

சளி பிடித்திருக்கும் போது, பூண்டை பச்சையாக உட்கொண்டு வந்தால், சளி தொல்லையில் இருந்து விடுதலைப் பெறலாம். 2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை தேனுடன் சேர்த்து தினமும் இரண்டு முறை உட்கொண்டு வர வேண்டும்.
 
இரண்டு அங்குல நீளம் உள்ள இஞ்சியை தோலை நீக்கி, கழுவி, ஆறிய நீர் விட்டு அரைக்கவும். பட்டு போல் இல்லாமல் மிக்சியில், இரண்டு முன்று சுற்று சுற்றினால் போதும். இதை வடிக்கட்டியதும், இந்த சாற்றில் தேன் கலந்து சாப்பிட வேண்டும். இது உடல் நலனுக்கு நல்லது.
 
இலவங்கப் பட்டை 100 கிராம், மிளகு, திப்பிலி ஆகியவை தலா 10 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். காலை வெறும் வயிற்றில் இரண்டு கிராம் அளவு தேனில் கலந்து சாப்பிட்டால், சளி மற்றும் இருமல் தலைபாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குணமாகும். 
 
கொத்தமல்லி விதை இரண்டையும் தண்ணீர் விட்டு காய்ச்சி அந்த தண்ணீரை லேசான சூட்டில் சாப்பிட்டு வந்தால் வெயில் காலங்களில் ஏற்படும் சளி குறையும். கொத்தமல்லி விதை வைட்டமின்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உதவும் ஊட்டச்சத்துகள் கொண்டிருக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பூசணிப்பழம் உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள்?

முருங்கை கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா? ஆச்சரியமான தகவல்..!

பழைய சோறு காலையில் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

முகத்துக்கு பாடி லோஷன் கூடாது: நிபுணரின் அவசர எச்சரிக்கை!

கண்களைப் பாதுகாக்க தினமும் செய்ய வேண்டிய அத்தியாவசியப் பழக்கங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments