Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதயநோய் வரும் அபாயத்தை குறைக்க உதவுமா பிஸ்தா...?

Webdunia
இன்றைய கால கட்டத்தில் மருந்துகளை பயன்படுத்துவதற்கு பதிலாக சில இயற்கை உணவு பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் பக்க விளைவுகள் அற்ற மாற்றத்தினை பெற்றுக் கொள்ளலாம்.
பிஸ்தாவில் பாஸ்பரஸ் அதிக அளவில் இருப்பதால், குளுக்கோஸை அமினோ அமிலமாகச் சிதைக்கிறது. எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு  பிஸ்தா ஒரு நல்ல பயனுள்ள உணவு என்பது உணவியல் நிபுணர்களின் கருத்து.
 
பிஸ்தா நல்ல ஆரோக்கியத்தை வழங்கக் கூடியது. பிஸ்தாவில் அதிக அளவில் உள்ள வைட்டமின் பி6, ரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது. அதோடு இது, செல்களுக்கு ஆக்சிஜனையும் கொடுக்கிறது.
 
வைட்டமின் பி6, நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதோடு, வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களை உற்பத்தி செய்து மண்ணீரல் மற்றும் நிணநீரைப் பராமரிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
 
பிஸ்தாவில் அதிகமாக உள்ள வைட்டமின் ஈ, தோல் முதிர்ச்சியடைவதை தடுத்து அதன் பொலிவைக் காக்கிறது. மேலும் வைட்டமின் ஈ ஆனது, புறஊதாக் கதிர்களால் தோல் பாதிக்கப்படாமல் இருக்கவும், தோல் புற்றுநோய் வராமல் இருக்கவும் உதவுகிறது.
 
பிஸ்தாவில் சியாசாந்தின், லூட்டின் ஆகிய இரு கரோட்டினாய்டுகள் காணப்படுகின்றன. இவை கண்ணின் விழித்திரையைப் பாதுகாத்து,  தெளிவான பார்வைக்கு வழிவகுக்கின்றன.
 
இதயநோய்கள் வராமல் தடுப்பதிலும், கண்புரை நோயில் இருந்து காப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பிஸ்தா பருப்பு, வைட்டமின் ஏ மற்றும் ஈ போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகளை அதிகப்படுத்தி, ரத்த நாளங்களைப் பாதுகாக்கிறது. இதயநோய் அபாயத்தைக் குறைக்கும் சக்தி  கொண்டதாகவும் விளங்குகிறது.
 
பிஸ்தா சாப்பிடுவது, உடலில் உள்ள கெட்ட எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கும், ஆரோக்கியம் தரும் எச்டிஎல் கொழுப்பை அதிகரிக்கும்.
 
டைப் 2 நீரிழிவு நோயில் இருந்தும் பிஸ்தா காக்கிறது. ஒரு கப் பிஸ்தா பருப்பில் 60 சதவீதம் மினரல், பாஸ்பரஸ் இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments