Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமுடி உதிர்வதை தடுத்து அடர்த்தியாக வளர மூலிகை ஆயில்.....

Webdunia
தேவையான பொருட்கள்:
 
செம்பருத்திப் பூ - 5 முதல் 8 வரை
துளசி இலைகள் -  ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை - 1 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்
பாதாம் எண்ணெய் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்
வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் - 2
லாவெண்டர் எண்ணெய் - 10 துளிகள்

 
செய்முறை:
 
முதலில் வெங்காயத்தின் தோலுரித்து, அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் கறிவேப்பிலை, துளசி மற்றும் செம்பருத்திப் பூவை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
 
ஒரு வாணலியில் லாவெண்டர் எண்ணெயைத் தவிர்த்து, இதர அனைத்து எண்ணெய்களையும் ஊற்றி, குறைவான தீயில் சூடேற்ற வேண்டும். பின் அதில் வெங்காய சாற்றினை ஊற்றி கிளறி விட வேண்டும். பின் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை, 
 
செம்பருத்தி பேஸ்ட்டை சேர்த்து, அத்துடன் வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் உள்ள எண்ணெயை துளையிட்டு சேர்த்து, குறைவான தீயில் 5 நிமிடம் கிளற வேண்டும். பின்பு அதில் வெந்தயத்தை சேர்த்து, அது நிறம் மாறும் வரை சூடேற்றி இறக்கி, அறைவெப்ப நிலையில் குளிர வைக்க வேண்டும். இறுதியில் எண்ணெய் மணத்தை அதிகரித்து சில துளிகள் லாவெண்டர் எண்ணெய் சேர்த்து கிளறி, ஒரு கண்ணாடி ஜாரில் ஊற்றி வைக்க வேண்டும். 
 
பயன்படுத்தும் முறை:
 
தலைமுடியை பகுதிகளாகப் பிரித்து, ஸ்கால்ப் முதல் முடியின் நுனி வரை நன்கு தடவி, 10 நிமிடம் விரலால் மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். 
 
குறிப்பு:
 
இந்த எண்ணெயைக் கொண்டு வாரத்திற்கு ஒருமுறை ஆயில் மசாஜ் செய்து வந்தால், தலைமுடி உதிர்வது குறைவதை நன்கு காணலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

மாதவிடாய் கால வலியை நீக்க உதவும் உணவுகள் எவை எவை?

குளிர் தாங்க முடியவில்லையா? என்னென்ன பிரச்சனை இருக்கலாம்?

மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments