Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் அன்னாச்சிப்பழச்சாறு !!

Webdunia
அன்னாச்சிப் பழத்தில் விட்டமின் A,B,C சத்துகள் நிறைந்துள்ளன. அன்னாசியில் மாங்கனீஸ் சத்துக்கள் நிறைய உள்ளன.

அசைவ உணவு சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் அன்னாசி பழச்சாறு அருந்தினால் போதும். மிக எளிதாக ஜீரணம் ஆகிவிடும். மலச்சிக்கலால் நீண்ட நாள் அவதிப்படுபவர்கள் அன்னாசிப்பழ சாறு அருந்திவந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
 
உடல் பலவீனமாக உள்ளவர்கள், நோயாளிகள் உடல் நன்கு பலத்துடன் விளங்க அன்னாசிப் பழச்சாற்றுடன் இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து அருந்தி வரவேண்டும். இதனால் உடல் சோர்வு நீங்கும். இதில் உள்ள சர்க்கரை, சிட்ரிக் அமிலம், மாலிக் அமிலம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கிறது.
 
பெண்கள் அன்னாசி பழத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால் மாதவிலக்கு அதிகம் வெளிப்படுவது கட்டுப்படும். கை, கால் வீக்கம் உள்ளவர்களும் தினமும் அன்னாசி பழம் சாப்பிட்டு வரலாம்.
 
அன்னாசிப்பழம் குடலையும், இரத்தத்தையும் சுத்தப்படுத்தி இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. இந்த பழத்தில் துத்தநாக உப்பு இருப்பதால் ஆண், பெண் மலட்டுத்தன்மை விரைவில் குணமாகும்.
 
அன்னாச்சிப்பழச் சாறுடன், தேன் கலந்து 40 நாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஒரு பக்கத் தலைவலி, வாய் புண், மூளைக்கோளாறு, ஞாபகசக்தி குறைவு போன்ற நோய்கள் குணமடையும்.
 
மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாச்சிப் பழச்சாற்றை சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
 
அன்னாசி பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதிகரிக்கும்.
 
இது இதய நோய்கள் மற்றும் மாரடைப்பில் இருந்து பாதுகாப்பளிக்கிறது. இப்பழத்தில் உள்ள இதர பிற வைட்டமின்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.இது சோர்வின்றி செயல்பட ஏதுவாகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அன்னாசி நிறைய சாப்பிடலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

மாதவிடாய் கால வலியை நீக்க உதவும் உணவுகள் எவை எவை?

குளிர் தாங்க முடியவில்லையா? என்னென்ன பிரச்சனை இருக்கலாம்?

மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யலாமா?

வெறுங்காலுடன் வாக்கிங் செல்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments