Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல் ஆரோக்கியத்தை வழங்கும் அதிக என்சைம்கள் உள்ள பப்பாளி காய் !!

Webdunia
பப்பாளிப் பழத்தை விட  பப்பாளி காயில் சுறுசுறுப்பை கொடுக்கும் ஆரோக்கியத்தை வழங்கும் என்சைம்கள் உள்ளன. அவற்றில் பப்பேன் மற்றும் சைமோபபைன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பப்பாளி காயை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில், இது உடலில் இரத்த குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
 
பப்பாளி காயில் நிறைய நார்ச்சத்து உள்ளது. இது மலச்சிக்கலை தீர்க்க உதவுகிறது மற்றும் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக்குகின்றன.
 
பப்பாளி காயை உட்கொள்வது எந்தவொரு காயத்தையும் குணப்படுத்தும் உடலின் திறனை அதிகரிக்கிறது. பப்பாளி காயில் அதிகபடியான விட்டமின் A உள்ளது.
 
பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், காயங்களின் மேல் பூசி வர விரைவில்  ஆறும். பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவினால் சேற்றுப்புண் குணமடைந்து மிருதுவான பாதங்கள் கிடைக்கும்.
 
குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பப்பாளிப் பாலை பூசி வந்தால் புண்கள் ஆறும். பப்பாளிக் காய் குழம்பு வைத்து, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து சாப்பிட்டால் பால் சுரப்பு அதிகரிக்கும்.
 
பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகளை உண்டாலோ, சாறை அருந்தினாலோ, குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வயிற்றிலிருந்து வெளியேறும்.
 
பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதியை முகப்பரு உள்ளவர்கள், மென்மையாக முகத்தில் தேய்த்து கழுவினால் பருக்கள் குறைந்து தழும்புகள் நீங்கும். முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவையும் கூட்டும்.
 
அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர 1 மாதத்தில் குண்டான உடல் படிப்படியாக மெலியும். பப்பாளியைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குறையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments