Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறைந்த விலையில் அதிக சத்துக்களைக் கொண்ட பப்பாளிப் பழம்...!!

Webdunia
சாதாரணமாக வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கப்படும் பப்பாளி பழத்தில் வைட்டமின், இரும்புச்சத்து, நார்ச் சத்துகள், பொட்டாசியம் என்று நிறைய சத்துகள் உள்ளன. 

நமது நாட்டில் அதிகம் கிடைக்கும் பழங்களில் ஒன்று பப்பாளிப் பழம். விலையும் குறைவாக கிடைக்கக்கூடிய இந்த  பழத்தில் அதிக சத்துக்கள் இருக்கிறது. மிகக் குறைந்த கலோரி பப்பாளியில் தான் உள்ளது.
 
உடல் பருமனைக் குறைக்க விரும்புபவர்கள் பப்பாளியை அடிக்கடி சேர்த்துக் கொண்டால் விரைவில் நல்ல பலன் தெரியும். பப்பாளியில் இருக்கும் பீட்டா கரோட்டின் என்ற சத்து புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கிறது. நரம்புத் தளர்ச்சிக்கு மிகவும் நல்லது.
 
குழந்தைகளுக்கு வளரும் வயதிலிருந்தே பப்பாளியைக் கொடுத்து வந்தால் வைட்டமின் ஏ குறை பாட்டால் வரும் கண் பார்வை   சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வராது. உடல் வளர்ச்சிக்கு உதவுவதுடன் பல்,எலும்பு வலுவடைய உதவும். நரம்புத் தளர்ச்சிக்கு மிகவும் நல்லது.
 
நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பப்பாளிப்பழம் இரத்த விருத்திக்கும் உறுதுணையாக இருக்கிறது. இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மையை அகற்றும். இரத்த சோகை என்னும் நோயைக்  குணப்படுத்தும்.
 
உடலுக்கு ஆரோக்கியத்தையும் சுறுசுறுப்பையும் உண்டாக்கக் கூடிய அற்புதமான சத்து பப்பாளியில் உண்டு.பப்பாளிப் பழத்தில் உள்ள சர்க்கரை நேரிடையாக இரத்தத்தில் கலப்பதில்லை. அதனால் இதை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களும் அளவாக எடுத்துக் கொள்ளலாம்.
 
பப்பாளிப்பழம் செரிமான நோய்களைக் குணப்படுத்துவதோடு மலச்சிக்கல்களைப் போக்கும் ஆற்றல் வாய்ந்தது. கல்லீரல், மண்ணீரல் நோய்க்கு பப்பாளிப் பழமே சிறந்த உணவு. பப்பாளிக்காயைச்சாறு அரைத்துக் குடித்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும்.
 
பப்பாளிக்காயில் உள்ள பாலினை காயம் உள்ள இடங்களில் பூசினால் காயம் விரைவில் குணமடையும். இதன் இலையை அரைத்து கட்டிகள் மீது பூசினால் கட்டிகள் உடையும். வீக்கம் வற்றும். தேள் கொட்டிய இடத்தில் பப்பாளியின் விதையை அரைத்துப் பூசினால் விஷம் முறிவு  ஏற்படும். பப்பாளிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி சாம்பாரில் காயாகவும் போடலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments