Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயிரில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்.....!!

Webdunia
தயிர் தினசரி உங்கள் உடலுக்கு தேவையான 20 சதவீத விட்டமின் டி ஊட்டச்சத்தும், 20 சதவீத கால்சியமும் கிடைக்கிறது. தயிரில் உள்ள ஊட்டச்சத்துகள் செரிமானத்தை அதிகரிக்கிறது. மேலும் தயிரில் உள்ள சத்துக்களை உடல் மிக எளிதாக கிரகித்துக் கொள்ளும். தயிரை  தொடர்ந்து உண்டு வந்தால் வயிற்று உபாதைகள்கள் சரியாகும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கிறது. தினசரி தயிரை உண்டு வந்தால்  வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன.
 
பாலில் இருந்து தயாரிக்கப்படும் மற்ற பொருட்களை விட தயிரில் அதிக அளவு கால்சியம் உள்ளது. எனவே தயிரை உண்பதால் எலும்புகள்  மற்றும் பற்கள் வலுவடைகின்றன. மேலும் எலும்பு தேய்மானம் போன்ற நோய்கள் வருவதையும் தயிர் தடுக்கிறது.
 
தயிரில் உள்ள பூஞ்சை எதிர்ப்புத் திறன் தலைமுடியில் உள்ள பொடுகை அழிக்கும். எனவே தலையில் தயிரை சிறிது நேரம் தடவி, காயவைத்த பின்னர் கழுவி வந்தால் பொடுகுத் தொல்லை குறையும்.
 
தயிர் உங்கள் மூளையின் செயல்பாட்டை மந்தப்படுத்துவதால், கோபம், மன அழுத்தம் ஆகியவை குறைக்கப்படுகிறது. தயிர் சாப்பிட்டால் தூக்கம் வரும் என கூறுவது இதன் காரணமாகத்தான்.
 
தயிரை தினந்தோறும் உண்டு வந்தால் இதயத்தில் உள்ள ரத்த ஓட்ட நாளங்களில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது. இதனால் இதய  நோய்களுக்கான வாய்ப்பும் குறைகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாரடைப்பு வருவதற்கு முன் வரும் அறிகுறிகள் என்ன?

மூல நோய் – காரணங்கள் மற்றும் இயற்கை நிவாரணங்கள்

ஜீன்ஸ் அணியும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

உள்ளூரில் சீண்டப்படாத நுங்கு.. மதிப்பு தெரிந்து வாங்க போட்டிப் போடும் வெளிநாட்டினர்!

மார்பகப் புற்றுநோய்க்கு ஒரே மருந்து! ஒரே தவணையில்!! உடனடி நிவாரணம்,,!

அடுத்த கட்டுரையில்
Show comments