Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எலுமிச்சை சாற்றில் உள்ள சத்துக்களும் நன்மைகளும் !!

Webdunia
தினமும் காலை எழுந்ததும் எலுமிச்சை நீரைப் பருகி வந்தால் உங்கள் வயிறு, உடல் எல்லாம் சுத்தமாகும். உடலில் உள்ள நச்சுக் கிருமிகளை கொல்ல இது வெகுவாக பயனளிக்கும்.

எலுமிச்சைப் பழச்சாற்றைப் குடிப்பதனால் உங்கள் குடல் பாதையில் இருக்கும் கிருமிகள் அழிக்கப்படுகின்றன. செரிமானக் கோளாறு உள்ளவர்கள், தண்ணீரில் எலுமிச்சைப் பழச்சாற்றைப் பிழிந்து பருகினால் செரிமானப் பிரச்சனை குணமாகும்.
 
கண்ணாடிப் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் எலுமிச்சைப் பழங்களை போட்டு வைத்தால், எலுமிச்சைப் பழம் நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
 
எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் சி சத்து மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதை  தடுக்கிறது.
 
சமையலறைப் பாத்திரங்கள் அல்லது காய்கறி நறுக்கும் பலகைகளை உபயோகப்படுத்தியப் பின்பு எலுமிச்சை சாறுப் பயன்படுத்திக் கழுவி வைத்தால் கிருமிகள்  அண்டாது இருக்கும்.
 
எலுமிச்சை பழத்தோடு இரண்டு, மூன்றுக் கிராம்பு சேர்த்து வைத்தால் போதும். இது கொசு உங்களை அண்டாது வைத்துக் கொள்ளும். எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடண்டுகள் அதிகம் உள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுநீர்ப்பை புற்றுநோயை தடுக்க புதிய சிகிச்சை.!

ஸ்பூனில் சாப்பிடுவதை விட கையால் சாப்பிடுவது சிறந்தது.. எப்படி தெரியுமா?

தூக்கத்தின்போது நள்ளிரவில் விழிப்பு வருகிறதா? என்ன செய்ய வேண்டும்?

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் தோல் சார்ந்த பிரச்சனை.. தீர்வு என்ன?

உலர் பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments