Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதாமில் உள்ள சத்துக்களும் பயன்களும் !!

Webdunia
25 கிராம் பாதாமில் ஒரு நாளைக்குத் தேவையான 70% வைட்டமின் ஈ உள்ளது. மற்ற பருப்புகளை விட பாதாமில் கால்சியம் நிரம்ப இருக்கிறது. இதனோடு சேர்த்து  புற்றுநோயை எதிர்க்கும் வைட்டமின் பி 17 என்ற சத்தும் இதில் உள்ளது.

மலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள், இருமல், இருதயக் கோளாறுகள், நீரிழிவு நோய், சருமக் கோளாறுகள், கேச பிரச்சனைகள், சொரைஸிஸ், பல் பாதுகாப்பு, இரத்த  சோகை, ஆண்மைக் குறைவு, பித்தப்பை கல் போன்ற பிரச்னைகளைக் களைவதில் பாதாம் பருப்பு துணை புரிகிறது.
 
தினந்தோறும் பாதாம் பருப்பு உட்கொண்டு வருபவர்களுக்கு உடலில் நல்ல கொழுப்பு கூடி கெட்ட கொழுப்பு குறைகிறது. பாதாமில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.
 
பாதாமில் உள்ள நல்ல கொழுப்பு, புரதம் மற்றும் பொட்டேஸியம் இருதயத்திற்கு நல்லது. வைட்டமின் ஈ என்டிஒக்சிடண்டாக செயல்பட்டு இருதய நோய் வரும் ஆபத்துக்களைக் குறைக்கிறது. பாதாமில் உள்ள போலிக் அமிலம் தமனிகளில் கொழுப்பு படிவதைத் தடுத்து நிறுத்துகிறது.
 
இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. பாதாமில் உள்ள பொட்டஸியம் இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவுகிறது. பாதாமில் உள்ள சத்துக்கள் மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றன. மூளைத் திறனை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
 
இரத்தத்தில் சீனி மற்றும் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதால் நீரிழிவு நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. சீனி சேர்க்கப்படாத பாதாம் பால் எடையைக் குறைக்க உதவுகிறது. உடல் பருமன் உடையவர்கள் பாதாமின் துணை கொண்டு எடையைக் குறைக்க முயற்சி செய்யலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments