Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிளகின் விலை மட்டும் அல்ல இதன் மருத்துவ குணங்களும் அதிகம் தான் !!

Webdunia
மிளகு நம் உணவில் இருக்கும் முக்கியப் பொருட்களில் ஒன்றாக உள்ளது. சைவக் குழம்புகளில் மிளகு இடம்பெறாமல் போனாலும் அசைவ உணவு வகைகளில் நிச்சயம் மிளகு நிச்சயம் பயன்படுத்தப்பட்டிருக்கும். 

சளி மற்றும் இருமல் டானிக்குகளில் மிளகு சேர்க்கப்படுகிறது. இது சுவாசக் குழாயில் உள்ள சளி மற்றும் கபத்தை உடைக்க உதவும். 
 
பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள் இருப்பதால், சளி மற்றும் இருமலுக்கு கருப்பு மிளகு சிறந்த  இயற்கை தீர்வாகும். அதன்  காரமான சுவை கபத்தை தளர்த்தவும், குறைக்கவும் உதவுகிறது. சூடான சூப் அல்லது ரசத்தில் சிறிது மிளகு தூள் சேர்த்து பருகவும்.  
 
மிளகு முதல் கட்டமாக செரிமானப் பிரச்சினைகளை சரி செய்வதில் முக்கிய பங்காற்றுகின்றது. செரிமான மண்டலத்தை வலுப்படுத்துவதில் மிளகை மிஞ்ச எந்தப் பொருளையும் சொல்ல முடியாது. மேலும் சளி, இருமல் தொல்லை உள்ளவர்கள் பாலில் மிளகினைப் போட்டு குடித்தால் பிரச்சினை உடனடியாகச் சரியாகும்.
 
வறட்டு இருமலுக்கு என்ன மருந்து எடுத்தும் பயனில்லை என்று நினைப்பவர்கள் முட்டையுடன் கூடுதலாக மிளகு சேர்த்து பொரித்து சாப்பிட்டால் வறட்டு இருமல் பிரச்சினை சரியாகும்.
 
மேலும் மிளகு தொண்டை வலி, தொண்டை வீக்கம், தொண்டைப் புண் போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாகவும் உள்ளது. மேலும் உடல் எடையினைக் குறைக்க நினைப்போர் மிளகில் டீப் போட்டு காலையில் வெறும் வயிற்றில் குடித்துவரலாம். மேலும் குழந்தைகளின் உணவில் மிளகாய்த் தூளுக்கு பதிலாக மிளகினை சேர்த்தால் உணவு ஆரோக்கியமானதாக இருக்கும்.
 
மேலும் வெறுமையாக வாயில் போட்டு தினசரி காலை மாலை என்ற அளவில் மென்று வந்தால் பற்கள் வெண்மையாகும். பற்களின் உறுதியும் அதிகரிக்கச் செய்யும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

HMPV தொற்று கர்ப்பிணிகளை பாதிக்குமா?

கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா? முக்கிய தகவல்..!

பெண்களுக்கு முகத்தில் ஏன் முடி வளர்கிறது? மருத்துவ காரணங்கள்..!

எச்.எம்.பி.வி. தொற்று பரவுவது எப்படி? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments