Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும் இயற்கை குறிப்புகள் !!

Webdunia
நம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதில் தண்ணீர் மிக முக்கியமான இடம் வகிக்கிறது. எனவே காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் சூடான நீர் குடிப்பது உங்க வயிற்றில் கழிவுகளை எளிதாக வெளியேற்றும்.

தண்ணீரின் மூலமாக உடலையும் உள்ளுறுப்புகளையும் சுத்தம் செய்யும் முறை மிகவும் சிறந்தது. அதனால் காலையில் வெறும் வயிற்றில் எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு லிட்டர் முதல் 2 லிட்டர் வரை கூட தண்ணீர் குடிக்கலாம்.
 
தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டால் உங்க குடல் சுத்தமாகும். காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் சுவையான ஆப்பிள் ஜூஸ் குடிக்கலாம்.
 
எலுமிச்சை சாற்றில் விட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறையவே உள்ளது. லெமன் ஜூஸ், உப்பு, தேன் சேர்த்து சூடான நீரில் கலந்து காலையில் குடியுங்கள். இதனால் மலச்சிக்கல் குணமடையும்.
 
ராஸ்பெர்ரி, ஆப்பிள்கள், பட்டாணி, ப்ரோக்கோலி, முதலியன. தானியங்கள், கொட்டைகள், முழு தானியங்கள், பீன்ஸ் மற்றும் விதைகள் போன்ற நார்ச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்க குடலை எளிதாக சுத்தம் செய்து குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.
 
கேரட், வெள்ளரி, முட்டைக்கோசு, ப்ரோக்கோலி, வோக்கோசு, பீட்ரூட், தக்காளி, கீரை போன்ற காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள், நொதிகள் மற்றும் அமினோ  அமிலங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த காய்கறிகளிலிருந்து ஜூஸ் போட்டு குடிக்கலாம். குடலில் உள்ள கழிவுகள் நீங்கி எடை குறையும்.
 
இஞ்சியின் தோல் நீக்கி அதை சாறு எடுத்து தேன் கலந்து ஒரு நாளைக்கு 2-3 முறை குடித்து வந்தால் குடல் சுத்தமாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments