Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து பகுதிகளுமே மருத்துவ தன்மை கொண்ட முடக்கத்தான் கீரை !!

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (18:54 IST)
முடக்கத்தான் கீரைக்கு முடர்குற்றான், முடக்கறுத்தான் போன்ற வேறு பெயர்களும் உண்டு. இதன் இலை, வேர் என அனைத்துமே மருத்துவ தன்மை கொண்டதாகும்.

முடக்கத்தான் கீரையானது மூட்டு வலி , முடக்கு வாதம் , கைகால் குடைச்சல் ஆகியவற்றை தீர்க்கும். இதன் இலைகளை பறித்து ரசம் வைத்து சாப்பிடலாம். இதன் இலைகளை பறித்து தோசை மாவில் கலந்து தோசையாக ஊற்றி சாபிடலாம்.
 
முடக்கத்தான் கீரையில் புரதச்சத்து, கொழுப்புச் சத்து, மாவுச்சத்து, தாது சத்து, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் சரியான அளவில் அடங்கியுள்ளது.
 
முடக்கற்றான் இலைகளை எண்ணெயில் காய்ச்சி, மூட்டு பகுதிகளில் வலியுள்ள இடங்களில் பூசினால் மூட்டு வலி உடனே நீங்கும். 
 
முடக்கற்றான் இலை மற்றும் வேர் இரண்டையும் குடிநீரில் இட்டு மூன்று வேளை அறுபது மில்லி வீதம் தொடர்ந்து சில நாட்கள் குடித்து வர நாள்பட்ட இருமல் சரியாகும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுண்டல் அவித்து சாப்பிடுவதால் கிடைக்கும் வைட்டமின்கள்.. ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்..!

பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் என்னென்ன?

பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

தக்காளியில் இருக்கும் வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?

முழங்கால் செயற்கை தசைநார் சிகிச்சை! தமிழகத்தில் முதலிடம்! – ரெலா மருத்துவமனை!

அடுத்த கட்டுரையில்
Show comments