Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோம்பு நீர் தயாரிக்கும் முறையும் அதன் பயன்களும் !!

Webdunia
சோம்பு பானம் தயாரிக்கும் முறை: ஒரு பாத்திரத்தில் ஒரு கப் நீரை ஊற்றி கொதிக்க வைத்து இறக்கவும். பின் அதில் 1-2 டீஸ்பூன் சோம்பு சேர்த்து 10 நிமிடம் மூடி வைக்க வேண்டும். அதன் பின் நீரை வடிகட்டினால், சோம்பு தண்ணீர் குடிப்பதற்கு தயாராகிவிட்டது.

சோம்பு நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் நல்லது. அதேப் போல் ஒவ்வொரு வேளை உணவு உண்ட பின்னரும் சோம்பு நீரைக் குடித்தால், வாய்வுத் தொல்லை, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகள் அகலும்.
 
நன்மைகள்:
 
ஒருவர் சோம்பு நீரை அன்றாடம் குடித்து வந்தால், அது செரிமான பிரச்சனைகளை நீக்குவதோடு, துர்நாற்றமிக்க வாய்வு வெளியேறுவதைத் தடுக்கும். மேலும் சோம்பில் உள்ள நார்ச்சத்து, செரிமானத்திற்கு உதவுவதோடு மட்டுமின்றி, உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால், அதிலிருந்து விடுபடவும் உதவும்.
 
உங்கள் வாய் துர்நாற்றத்துடன் இருக்கிறதா? இவர்கள் தினமும் சோம்பை வாயில் போட்டு மெல்லுவதோடு, சோம்பு நீரைக் குடித்து வந்தால், அதில் உள்ள ஏராளமான மருத்துவ பண்புகள், வாயில் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து, வாய் துர்நாற்றத்தைத் தடுப்பதோடு, வாயை புத்துணர்ச்சியுடனும்  வைத்துக் கொள்ளும்.
 
மாதவிடாய் காலத்தில் சில பெண்கள் கடுமையான வயிற்று வலி மற்றும் வயிற்று பிடிப்புக்களால் அவஸ்தைப்படுவார்கள். இதிலிருந்து விடுபட சோம்பு நீர் உதவியாக இருக்கும். இன்னும் சில பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி பிரச்சனை இருக்கும். இந்த பானத்தைக் குடித்தால் மாதவிடாய் சுழற்சி பிரச்சனை சரியாகும்.
 
உடல் பருமன் பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள் தினமும் சோம்பு நீரைக் குடிப்பதன் மூலம், நீர் உடம்பாக இருந்தால் விரைவில் குறைந்துவிடும். அதுவே  கொழுப்பு உடம்பாக இருந்தால், உடலின் மெட்டபாலிசம் மேம்பட்டு, கொழுப்புக்கள் வேகமாக எரிக்கப்பட்டு, பசியும் கட்டுப்படுத்தப்படும்.

தொடர்புடைய செய்திகள்

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments