Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிஸ்தா பருப்பில் உள்ள மருத்துவ குணங்களும் அதன் பயன்களும்....!!

Webdunia
பிஸ்தா சாப்பிடுவது, உடலில் உள்ள கெட்ட எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கும், ஆரோக்கியம் தரும் எச்டிஎல் கொழுப்பை அதிகரிக்கும். டைப் 2 நீரிழிவு நோயில் இருந்தும் பிஸ்தா காக்கிறது. ஒரு கப் பிஸ்தா பருப்பில் 60 சதவீதம் மினரல், பாஸ்பரஸ் இருக்கிறது.
பிஸ்தா பருப்பு வைட்டமின் ஏ மற்றும் இ போன்ற சக்துக்கள் உள்ளதால் இரத்த நாளங்களை பாதுகாக்கும். மேலும் இதயநோய் அபாயத்தை குறைக்கும் சக்தி கொண்டது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது. அதோடு இது, செல்களுக்கு ஆக்சிஜனையும்  கொடுக்கிறது.
 
பிஸ்தா பருப்பில் அதிக அளவில் வைட்டமின் பி6 உள்ளது. இது, இரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது. அதோடு மட்டுமில்லாது செல்களுக்கு ஆக்ஸிஜனை கொடுக்கிறது. மேலும்வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களை உற்பத்தி செய்து  மண்ணீரல் மற்றும் நிணநீரைப் பராமரிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
 
வைட்டமின் பி6 ல் ஹீமோகுளோபின் என்ற அமிலம் அதிகப்படுத்தக்கூடிய தன்மையும், ஆக்ஸிஜனை ரத்தஓட்டம் வழியாக செல்களுக்கு கொண்டுசேர்க்கும் பொறுப்பு மற்றும் ஆக்ஸிஜனை அளவை அதிகரிக்கும் பணியை செய்கிறது.
 
இதயநோய்கள் வராமல் தடுப்பதிலும், கண்புரை நோயில் இருந்து காப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதயநோய் அபாயத்தைக் குறைக்கும் சக்தி கொண்டதாகவும் விளங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments