Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல் சூட்டினை தணிக்கும் முலாம்பழத்தின் மருத்துவ குணங்கள் !!

Webdunia
முலாம்பழம் வெயில் காலங்களில் அதிக அளவு மக்களால் விரும்பி வாங்கப்படக் காரணம் அது உடல் சூட்டினைத் தணித்து, உடலுக்குக் குளிர்ச்சியினை ஏற்படுத்துவதால்தான்.

முலாம்பழத்தை பழச்சாறாக குடித்தால் கண் எரிச்சல், கண் சூடு போன்றவை குறைந்து கண் குளிர்ச்சி பெறும். கல்லீரல் வீக்கத்தைக் குறைக்கும். பழச்சாறு தாகம் தீர்த்து தொண்டை வலியை குணப் படுத்தும்.
 
முலாம் பழமானது சிறுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளான சிறுநீர் போகும்போது எரிச்சல், நீர்க் கடுப்பு போன்றவற்றிற்குத் தீர்வாகவும், கர்ப்பிணி பெண்களுக்கு முலாம்பழத்தை கொடுத்தால் கரு வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
 
முலாம்பழமானது மூல நோய்க்கு சிறந்த தீர்வாக இருக்கச் செய்கின்றது, மேலும் மலச் சிக்கல், வயிற்று வலி, செரிமானப் பிரச்சினைகள், பசியின்மை போன்றவற்றிற்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கின்றது.
 
முலாம் பழமானது நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை மேம்படுத்தி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கச் செய்யவும் செய்கின்றது.
 
முலாம்பழம் கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு தருவதாகவும், கல்லீரலை சுத்தம் செய்வதாகவும் உள்ளது, மேலும் முலாம்பழல் அல்சர் என்னும் வாய்ப்புண், குடல் புண் போன்றவற்றிற்கு சிறந்த தீர்வாக இருக்கின்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இதய பிரச்சனை இருப்பவர்கள் வேகமாக நடைப்பயிற்சி செய்யலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments