Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அற்புத மணம் உள்ள மல்லிகையின் மருத்துவகுணங்கள் !!

Webdunia
வியாழன், 23 ஜூன் 2022 (17:37 IST)
மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை போன்ற நோய்களும் குணமாகும்.


மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்சி குறைந்து, படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.

மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று போட்டால் அந்த வலி குறைந்து, பால் சுரப்பதும் படிப்படியாக நிற்கும்.

மல்லிகைப்பூக்களை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து, டீ போல போல் காய்ச்சி குடிக்க சிறுநீரக கற்கள் நீங்கும். நீர்சுருக்கு, நீர் எரிச்சல் நீங்கும்.

மல்லிகைப் பொடி டீ தினமும் குடித்தால் எலும்புருக்கி நோய், நுரையீரல் புற்று நோய்களின் பாதிப்பு குறையும்.

குடலில் புழுக்கள் தங்கியிருந்தால் அவை குடல் சுவர்களை அரித்து தின்று புண்களை உண்டாக்கும். இதனால் செரிமானத்தன்மை குறையும். இந்த குடற்புழுக்களை அழிப்பதற்கு மல்லிகை மலர்களை நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி அருந்தினால் குடல் புழுக்கள் நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments